சுடச்சுட

    

    சர்க்கரை நோயாளிகள் அவசியமாக சாப்பிட வேண்டிய அருமருந்து! 

    By கோவை பாலா  |   Published on : 29th July 2019 10:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    methi_leaves

     

    வெந்தயக் கீரை துவையல்

    தேவையான பொருட்கள்

    வெந்தயக் கீரை - 100 கிராம்
    தக்காளி - 2
    மிளகு - 10 கிராம்
    வெங்காயம் - 2
    கடலைப் பருப்பு - 20 கிராம்
    உளுந்தம் பருப்பு - 20 கிராம்
    பெருங்காயம் - தேவையான அளவு
    கடுகு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும். அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து துவையலாக அரைத்துக் கொள்ளவும்.

    பயன்கள் : இந்த துவையலை சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தினமும் உணவில் அவசியம் சேர்த்து கொள்வது மிக அவசியம்.  மேலும் இது உஷ்ண நோய்களையும் , குடற்புண்ணையும் போக்கக் கூடிய அருமருந்து துவையலாக இருக்கும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai