உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு

பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து
உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவு

பீட்ரூட் பசுங்கலவை (சாலட்)

தேவையான பொருட்கள்
 
பீட்ரூட் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சம் பழம் -  2
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை : பீட்ரூட் தோலினை அரிந்து சிறு துண்டுகளாக நறுக்கி அத்துடன் தக்காளியையும் நறுக்கிச் சேர்த்து இதனுடன் எலுமிச்சம் பழச்சாற்றை தோலோடு சேர்த்து அதனுடன் மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும்.

பயன்கள் : இதனை  சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். ரத்த குறைபாட்டினால் உண்டாகும் தலைவலி நீங்கும் மேலும் உடம்பில் உண்டாகும் கற்றாழை நாற்றத்தையும் நீக்கும் ஆரோக்கியமான உணவு இது.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com