முகத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உண்டாவதை நீக்கும் மருந்து இது!

முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில்
முகத்தில் அதிக எண்ணெய் பிசுபிசுப்பு உண்டாவதை நீக்கும் மருந்து இது!

மாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த சுவையான மாங்கனித் துண்டுகள - 100 கிராம்
கேரட் சாறு -  100 மி.லி
தேங்காய்ப் பால் - 100 மி.லி
தேன் - 2 தேக்கரண்டி

செய்முறை : முதலில் மாங்கனித் துண்டுகளை கேரட் மற்றும் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்பு அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.

பலன்கள் : மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் தோல் மற்றும் குடல் சார்ந்த குறைபாடுகளை நீக்கும். மேலும் முகத்தில் அதிக எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு  பொலிவை கொடுக்கும் அருமையான மாமருந்து ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com