புற்றுநோயைப் பற்றிய உண்மைகளும் புரளிகளும்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அதைப் போல் புற்றுநோய் என்றாலே மக்கள் மிகுந்த பீதி அடைகின்றனர்.
புற்றுநோயைப் பற்றிய உண்மைகளும் புரளிகளும்

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள் அதைப் போல் புற்றுநோய் என்றாலே மக்கள் மிகுந்த பீதி அடைகின்றனர்.

அதற்கு காரணம் பல.  புற்றுநோயைக் குணப் படுத்த முடியாது.  சிகிச்சைக்குப் பிறகும் புற்றுநோய் திரும்ப வளரும். புற்று நோய் சிகிச்சைக்கு அதிகம் செலவாகும். புற்றுநோயை மந்திரம் மாயங்களால் குணப் படுத்தி விடலாம். புற்றுநோய் ஒரு பூர்வ ஜென்ப பாவம். என்றெல்லாம் மக்கள் நினைக்கின்றனர். ஆனால்,  புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் முறையான சிகிச்சைகளின் மூலம் முழுவதும் குணப்படுத்தக்கூடிய நோய், ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் புற்றுநோய் முற்றிய பிறகு தகுந்த சிகிச்சை அளித்தால் கூட அதை குணப்படுத்த முடியாது.

புற்றுநோய் திரும்பி வளர்வதற்கான காரணங்களில் மிக முக்கியமான காரணங்கள் இரண்டு 1. புற்றுநோயின் தன்மை. 2. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை. புற்றுநோயின் தன்மை: புற்றுநோயின் தன்மை என்பது புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களில் குணாதிசியங்களைப் பொருத்தது. அந்த குணாதிசயங்கள் பிறப்பிற்கு முன்போ, பிறப்பிற்கு பின்போ ஏற்பட்டிருக்கக் கூடும்.  பிறப்பிற்கு முன்பு மற்றும் பின்பு ஏற்படும் அதிர்ச்சிகள், மருந்துகள், கதிரியக்கச் சிகிச்சைகள் போன்றவற்றால் அந்த செல்களின் குணாதிசயங்கள் மாறுபடும்.

அதைப் பொருத்தே ஒரு புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகும் அது மிகத் தீவிரமாக வளரக்கூடிய புற்றுநோயா? அல்லது சிகிச்சையால் கட்டுப்படும் புற்றுநோயா? என்பது தெரியவரும்.  புற்றுநோய் சிகிச்சை: புற்றுநோய் சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை. கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, பிரத்யேக சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. சில புற்றுநோய்களுக்கு எல்லா சிகிச்சைகளிலும் தகுந்த நேரத்தில் சரியான விகிதத்தில் கலந்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அவற்றில் ஏதேனும் ஒன்றை தவறவிட்டால் கூட புற்றுநோய் திரும்ப வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.  ஆரம்ப கண்டுபிடிப்பு, முறையான சிகிச்சை இதுவே புற்றுநோயை குணமாக்குவதற்கான தாரக மந்திரம் என்ற உண்மையை எல்லோரும் புரிந்து கொண்டால் புற்றுநோயே இல்லாத உலகத்தை விரைவில் படைக்கலாம். டாக்டர்  மோகன் பிரசாத் M.S., M.Ch., MNAMS., FAIS., FAGE, FICA., மோகனிஸ் மெடிசிட்டி மருத்துவமனை கே.கே.நகர், மதுரை தொலைபேசி: 0452 2521911, 2522727

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com