மழைக்காலத்தில் இதையெல்லாம் கவனிங்க!

அடாது மழை பெய்தாலும், விடாது நம்முடைய வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது.
rainy day
rainy day

அடாது மழை பெய்தாலும், விடாது நம்முடைய வேலைகளை கவனிக்க வேண்டியுள்ளது. எனவே மழையினால் ஏற்படும் காய்ச்சல், சளி பிடித்தல் போன்றவை நம்மைத் தாக்காமல் பார்த்துக் கொள்ள சில டிப்ஸ்.

மழைக்காலங்களில் உணவினை சூடாக உண்பது நலம். மாலை வேளையில் சூப் குடிக்கலாம். 

  • தூதுவளை கீரையை வாங்கி சுத்தம் செய்து அதனுடன் ஒரு பூண்டுப் பல், துளி இஞ்சி சேர்த்து வேகவைத்து அரைத்து வடி கட்டி அந்தச் சாறுடன் மிளகுப்பொடி, உப்பு, வெண்ணெய் சிறிதளவு சேர்த்து தேவை என்றால், சிறிது பிரஷ் கிரீம் சேர்த்து சூப் செய்து பருகினால் சளி பிடிக்காது. தொண்டைக்கும் நல்லது. இதனை வாரம் ஒருமுறை பருகினால் போதும்.
  • துளசியையும், ஓம வள்ளி தழையையும் சேர்த்து கொதிக்க வைத்து தினமும் டீ பருகலாம். உடலுக்கு நல்லது. துளசி ஒரு கிருமி நாசினி.

  • தினமும் பாலில் மஞ்சள் பொடியும், மிளகுப் பொடியும் சேர்த்து பருகலாம்.

தினமும் வெந்நீரில் எலுமிச்சைச் சாறுடன், தேனும் சிறிது இஞ்சிச் சாறும் கலந்து குடித்து வந்தால் தொண்டை வறட்சி போய்விடும்.

வாரம் 2 அல்லது 3 முறை வெந்நீரில் உப்பு போட்டு வாய் கொப்புளித்தால், சளிக்கட்டு நீங்கும்.

மழைக் காலங்களில் மிதமான சூட்டில் குளிக்கவும், குடிக்கவும் செய்தல் அவசியம்.

- கிரிஜா ராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com