போதை மறுவாழ்வு சிகிச்சையில் கொடி கட்டிப் பறந்த இந்த மருத்துவரை கொண்டாடுகிறது கூகுள் டூடுல்!

இன்றைய கூகுள் டூடுலின் நாயகனான டாக்டர் ஹெர்பர்ட் டேவிட் கிளெபர் (Dr. Herbert Kleber). போதை பழக்கம், மறுவாழ்வு குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையில் முன்னோடியாக இருந்தார். 
போதை மறுவாழ்வு சிகிச்சையில் கொடி கட்டிப் பறந்த இந்த மருத்துவரை கொண்டாடுகிறது கூகுள் டூடுல்!

இன்றைய கூகுள் டூடுலின் நாயகனான டாக்டர் ஹெர்பர்ட் டேவிட் கிளெபர் (Dr. Herbert Kleber). போதை பழக்கம், மறுவாழ்வு குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 

'சர்வ நிச்சயமாக நான் நம்பிக்கைமிக்கவன்தான்' என்று மனநல மருத்துவர் டாக்டர் ஹெர்பர்ட் கிளெபர் ஒருமுறை குறிப்பிட்டார். 40 ஆண்டுகளாக போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுடன் வேறு எப்படி வேலை செய்வது?’

1934 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பிறந்த டாக்டர் ஹெர்பர்ட் கிளெபரை இன்று (அக்டோபர் 1, 2019) கூகுள் கொண்டாடுகிறது, மேலும் போதை பழக்கத்துக்கு அடிமையாகி மீட்பு சிகிச்சையில் அவர் முன்னோடியாக பணியாற்றியதற்காக உலக அரங்கில் பெரிதும் பாராட்டப்பட்டார்.  

1964-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொது சுகாதார சேவையில், தன்னார்வத் தொண்டு செய்த டாக்டர் கிளெபர், கென்டக்கியின் லெக்சிங்டனிலுள்ள ஃபெடரல் பிரிசன் மருத்துவமனையில் பணிக்கு அமர்த்தப்பட்டார். அந்த சிறை மருத்துவமனை 'போதைப் பொருள் பண்ணை’ என்றே அழைக்கப்பட்டது. காரணம், ஆயிரக்கணக்கான கைதிகள் அங்கு போதை மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்தனர். பெரும்பாலான நோயாளிகள் விடுதலையான உடனேயே மீண்டும் அச்சிறைக்கு வந்துவிடுவார்கள்  என்பதைக் கவனித்த ஹெர்பர்ட், ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கினார்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான பலரை அக்கொடிய நிலையிலிருந்து தொடர் சிகிச்சை அளித்து மீட்டார் டாக்டர் ஹெர்பர்ட். அவரது வாழ்நாள் முழுவதும் ஒருசில தனிப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அவருடனே வாழ்ந்தனர். சில சமயங்களில் பணம் செலுத்த முடியாத நோயாளிகளுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்தார் ஹெர்பர்ட். இவ்வாறு போதைப் பழக்கத்திலிருந்து நோயாளிகளை விடுவிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவர் ஹெர்பர்ட்.

ஹெர்பர் நகைச்சுவை உணர்வு மிக்கவர். தொழில்ரீதியாகவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், போதைக்கு பழக்கத்திற்கு ஆளானவர்களைப் பற்றிய தனது நம்பிக்கைகளை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. ஹெர்பர்ட்டின் தொலைநோக்குப் பார்வையும், பேச்சுத்திறனும், புத்திசாலித்தனமும் தொழில்ரீதியான பல பிரச்னைகளைத் தீர்க்க உதவியது. எல்லோரும் ஒரு திசையில் பார்க்கும்போது, ​​ஹெர்பர்ட்  தனது பார்வையையும் சிந்தனையையும் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இடத்திற்கு மாற்றி யோசிப்பார். மேலும் அசலான மற்றும் சாத்தியப்படும் தீர்வுகளைக் கண்டடைவார். இதுவே அவரது வெற்றிக்கு காரணம் எனலாம்.

தமது தொழிலில் நெறிமுறைகளை பின்பற்றும் பழக்கத்தை உடையவர் மருத்துவர் ஹெர்பர்ட். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு: மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார நோயாளிகள் மனம் குளிர்ந்து அளித்த பரிசுகளை ஏற்க மறுத்துவிட்டார்.  

ஹெர்பெர்டின் மிகப் பெரிய பண்புகளில் ஒன்று அவரது பெருந்தன்மை. நாட்டின் முன்னணி கல்வி ஆய்வாளர்களுக்கு ஹெர்ப் வழிகாட்டினார். கல்வியாளர்களுக்கு மட்டுமல்ல, அவர் பலரின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவினார். அவர் எப்போதும் தனது அனுபவத்தையும் ஆதரவையும் சுதந்திரமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தனது சிகிச்சை முறையை சான்றுகள் சார்ந்த சிகிச்சை என்று விவரிக்கும் டாக்டர் கிளெபர், போதை பழக்கத்தில் வீழ்ந்தவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களை விடுவிக்க மருத்துவ மற்றும் விஞ்ஞானரீதியாக அணுகவேண்டும் என்று கருதினார். இந்தத் துறையில் தனது முன்னோடிகளில் பலர் செய்ததைப் போல அல்லாமல், நோயாளிகளைத் தண்டிப்பதற்கும் வெட்கப்படச் செய்வதற்குப் பதிலாக, டாக்டர் கிளெபர் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், பல நோயாளிகளை மீட்புப் பாதைக்கு உதவியதுடன், மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் மூலம் மீண்டும் போதைக்குட்படுவதை தவிர்க்கவும் உதவினார். தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு கொள்கை அலுவலகத்தில் துணை இயக்குநராக அவரை நியமித்தார் புஷ்.  

டாக்டர் க்ளெபர் தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில், நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார், முக்கியமான புத்தகங்களை எழுதினார், மேலும் பல மருத்துவ நிபுணர்களுக்கு இந்த சிகிச்சை துறையில் வழிகாட்டியாக விளங்கினார். போதை பழக்கத்துக்கு அடிமையாதல் சிகிச்சை முறையை மாற்றினார், நோயாளிகளை வெட்கப்படுவதைக் காட்டிலும் தங்களுடைய பிரச்னைகளின் வேரைக் கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் அனுமதித்தார் - அவரது செயல்பாட்டில் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com