20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம்

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.
20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம்


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் முக கவசங்களை உற்பத்தி செய்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிம் குக் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இது உண்மையிலேயே உலகளாவிய முயற்சி ஆகும். அதிக அளவில் தேவைப்படும் இடங்களுக்கு முக கவசங்கள் நன்கொடை வழங்குவதை உறுதி செய்யவதற்காக அந்தந்த பகுதியைச் சேர்ந்த அரசாங்கங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறோம்.

முதல்கட்டமாக கடந்த வாரம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள சில மருத்துவமனைகளுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டன. ஒரு பெட்டிக்கு நூறு என்ற கணக்கில் அவற்றை அடுக்கி அனுப்புகிறோம். 2 நிமிடங்களுக்குள் அதனை எடுத்து பயன்படுத்தும் விதமாக அவை உள்ளன. இந்த முக கவசங்கள் ஒவ்வொருவரின் முக அளவிற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளும் திறன் கொண்டவை.

கரோனா நோய்த்தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறைக்கு மத்தியில், உலகளவில் 20 மில்லியனுக்கு அதிகமான முக கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், இந்த வார இறுதிக்குள் 1 மில்லியன் முக கவசங்களை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு வாரத்திற்கு 1 மில்லியனுக்கு அதிகமான முக கவசங்களை தயாரித்து அனுப்ப உள்ளோம். 

ஆப்பிள் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து இந்த சாதனங்களை மிகவும் தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்கிறது. விரைவில் அமெரிக்காவிற்கு வெளியே இந்த பணிகளை விரிவுபடுத்துவோம் என்று நம்புவதாக டிம் குக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com