எச்சரிக்கை: வெள்ளையாக இருக்கும் இதை நம்பாதீர்கள்

சிறிய அளவில் சர்க்கரை நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து அல்ல, ஆனால் நாம் அதை மிக மிக அதிகமாக சாப்பிடுகிறோம்.
எச்சரிக்கை: வெள்ளையாக இருக்கும் இதை நம்பாதீர்கள்

சிறிய அளவில் சர்க்கரை நம் ஆரோக்கியத்துக்கு ஆபத்து அல்ல, ஆனால் நாம் அதை மிக மிக அதிகமாக சாப்பிடுகிறோம். உணவில் அதிகப்படியான சர்க்கரை உடல் எடை அதிகரிப்பு மட்டுமல்லாமல் இதயத்திற்கும் கெடுதல் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் அதிக அளவு சர்க்கரையின் நுகர்வு (அல்லது சர்க்கரைக்கு அடிமையாதல்) மன ஆரோக்கியத்தில் கடுமையான எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்கள் இப்போது உள்ளன.

தினசரி 5 சதவீதம் மட்டுமே சர்க்கரையிலிருந்து கலோரி தேவையில் உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. ஜீரோ ஊட்டச்சத்து மதிப்புள்ள ஒரு வழக்கமான உணவில் இது 13 -15 சதவீதம் வரை அதிகமாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவில், மக்கள் சர்க்கரை தேவைப்படும் அளவை விட ஐந்து மடங்கு அதிகமாக உட்கொள்கின்றனர்.

சர்க்கரையை அதிகளவில் உட்கொள்வதால் மூளை செல்களுக்கு இடையேயான தொடர்பு பலவீனமடைந்து கற்றல் சிரமங்களுக்கும் நினைவாற்றல் பலவீனத்திற்கும் வழிவகுக்கிறது என்று ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. இது மனச்சோர்வு மற்றும் பதற்றத்திற்கு வழிவகுக்கும். சர்க்கரைக்கான ஏக்கம் ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது,  எரிச்சல், மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது,  கிட்டத்தட்ட போதை பழக்கத்துக்கு அடிமையானது போலத்தான் சர்க்கரைக்கு அடிமையானவர்களின் நிலையும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அதிகப்படியான சர்க்கரை மோசமானது என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் அதை அவர்களால் தவிர்க்கவே முடிவதில்லை. சர்க்கரைக்கு அடிமையாகும் பழக்கத்தை சமாளிக்க 

  1. முதலாவதாக, ஒவ்வொரு நாளும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்கிறார்கள் என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை.
  2. சர்க்கரைக்கு அடிமையாக மாறிக் கொண்டிருப்பதைத் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை.
  3. சிலர் சர்க்கரை நிறைந்த பண்டங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் கடினம். அளவான சர்க்கரை உடலுக்கு தேவைதான் என்றாலும் சற்று அதிகமாகிவிட்டாலும் கெடுதல்தான். எனவே, உங்கள் மனதையும் உடலையும் இதிலிருந்து விடுவிக்க முடியும். இன்றிலிருந்து ஆரம்பித்தால் சுமார் 2 வாரங்களில் இதைச் செய்யலாம்:
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையை அவரவர் வீட்டிலிருந்து அகற்றிவிடவேண்டும்.
  • சத்தான காலை உணவை உண்ணுங்கள்
  • உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்கவும்
  • வீட்டியேயே ஆரோக்கியமான தின்பண்டங்களைத் தயாரித்து அவற்றை சாப்பிடலாம்.
  • உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
  • மன அழுத்தத்தை குறைக்கவும்
  • இரவில் நன்றாக தூங்குங்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com