பார்வை இழப்புக்கு ஸ்மார்ட்போன் காரணமா: ஆய்வு முடிவு

லண்டனில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் தந்து ஒரு கண்ணில் அடிக்கடி நீர்கோர்த்து பார்க்க முடியாமல் போகிறது என்று கண் மருத்துவரை அணுகியிருக்கிறார்.
பார்வை இழப்புக்கு ஸ்மார்ட்போன் காரணமா: ஆய்வு முடிவு

லண்டனில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் தந்து ஒரு கண்ணில் அடிக்கடி நீர்கோர்த்து பார்க்க முடியாமல் போகிறது என்று கண் மருத்துவரை அணுகியிருக்கிறார். போலவே நடுத்தர வயது பெண்ணொருவரும் இதே பிரச்னைக்காக மருத்துவறை அணுகியுள்ளார்.

இருவரையும் சோதித்த மருத்துவர் விரிவான பரிசோதனைக்குப் பின் இது ‘ட்ரான்ஷியன்ட் ஸ்மார்ட்போன் பிளைன்ட்னெஸ்’ எனப்படும் ‘தற்காலிக பார்வையிழப்பு’ அவர்கள் இருவருக்கும் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தார்.

அண்மை காலத்தில் ஏற்படும் இத்தகைய பிரச்னையால் மேலும் பலர் பாதிப்புள்ளாகியிருந்தனர். ஆனால் அவர்களுக்கு பிரச்னையின் காரணம் தெரியவில்லை. இரவில் படுக்கச் செல்லும் போது, படுத்த நிலையிலேயே இடப்பக்கம் சாய்ந்தபடி, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் திரையை தினந்தோறும் தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு இந்த ‘ட்ரான்ஷியன்ட் ஸ்மார்ட்போன் பிளைன்ட்னெஸ்’ ஏற்படுமாம். முகத்தின் இடது பக்கம் தலையணையில் பதிந்திருக்க, வலது கண்ணால் சிரமப்பட்டு ஸ்மார்ட் ஃபோன் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பதால் விளையும் பிரச்னை இது. சரியாகத், விடியும் முன்பே விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனைப் பார்ப்பதை தொடர் பழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்பிரச்னை என்கிறது இந்த ஆய்வு. போலவே இதையே தொடர் பழக்கமாகக் கொண்டிருந்தால் விழித்திரை பிரச்னைகள் ஏற்பட்டு நிரந்தரமாக பார்வையிழப்பும் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு தொலைக்காட்சி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எந்த செவ்வக த் திரையையும் உற்றுப் பார்க்காமல், விழிகளை மூடிச் சற்று நேரம் அமைதியாக தியானித்து, அதன் பின் உறங்கச் சென்றால் நிச்சயம் ‘ட்ரான்ஷியன்ட் ஸ்மார்ட்போன் பிளைன்ட்னெஸ்’ பிரச்னை ஏற்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com