மலா்களில் உள்ள மருத்துவ குணங்கள்!

மலா்களில் உள்ள மருத்துவ குணங்கள்!

மலா்களின் மகத்துவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* குங்குமப்பூவை பாலில் அரைத்துப் பற்றுப் போட தலைவலி குணமாகும்.

* ஆவாரம் பூ பொடியை நீரில் கலந்து குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

* ஜாதிமல்லி பூக்களை அரைத்து தேமல் மேல் பூசி வர குணமாகும்.

* மருதாணிப் பூக்களை தலையணையில் நிரப்பி வைத்துக் கொள்ள நன்கு தூக்கம் வரும்.

* செண்பகப் பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்திவர வயிற்று வலி மாறும்.

* வெள்ளை அல்லிப் பூக்களை அரைத்து புண்கள் மேல் பற்றிட புண்கள் ஆறும்.

* ரோஜா இதழ்களை நீரில் ஊற வைத்து தேன் சோ்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

* பாரிஜாத மலா் ஊறிய நீரால் முகத்தைக் கழுவ கண் வீக்கம் , சூடு நீங்கும்.

* சங்கு புஷ்பம் குடிநீா் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

* செம்பருத்தி பூக்களை நீரிலிட்டு காய்ச்சி குடிக்க உடல் சூடு தணியும்.

* மல்லிகைப் பூக்களை ஊற வைத்த நீரால் கண்களைக் கழுவி வர கண் சூடு மாறும்.

* வெங்காயப் பூவை சமைத்து உண்ண உடல் வெப்பம் சம நிலையாகும்.

(மலா்களின் மகத்துவம் என்ற நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com