கண்டேன் புதையலை

புதையல் 28

லட்சிய வாழ்வு கைவரப் பெற அறிவொளி தரும் பயிற்சிகளின் முக்கியத்துவம் உணர்ந்த

10-06-2017

புதையல் 27

எதையும் முதல் முறையா கேட்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கும் விஷ்ணு

03-06-2017

புதையல் 26 

'காலைல ஐந்து  மணிக்கு எழுந்து அரக்க பரக்க சமையலை செய்யணும். அரை மணி

27-05-2017

புதையல் 25

உடலியக்கத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகளால் உற்சாகமான சந்தோஷ், விஷ்ணு,

20-05-2017

புதையல் 24

விசையுறு பந்தினைப் போலே மனம் விரும்பியபடி செல்லும் உடலைப் பெறும் பயிற்சி

06-05-2017

புதையல் 23

தன்னைப் பற்றித் தாழ்வான எண்ணம் கொண்டிருந்த கார்த்திக், முன்னேற துடிக்கும்

29-04-2017

புதையல் 22

காட்சிவெளி மற்றும் கற்பனைத்திறன் பற்றி விளக்கிக் கொண்டிருந்த அறிவொளி

22-04-2017

புதையல் 8

வாழ்நாளில் மறக்க முடியாத ஆசிரியர் யாராவது நினைவுக்கு வருகிறார்களா என்று

03-12-2016

கண்டேன் புதையலை!

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி மனிதன் அலைவது, இறைவனைக் காண மட்டுமல்ல; ஞானத்தையும்தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எட்டு விதமான அறிவுத் திறன்கள் மறைந்துள்ளன. அந்த எட்டிலும் இரண்டு அல்லது மூன்றாவது பலமானதாக இருக்கும். குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். அதைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்த வல்லவரே, இசைத் துறையில் ஏ.ஆர். ரகுமான்போல, விளையாட்டுத் துறையில் சச்சின் டெண்டுல்கர்போல சிறந்து விளங்கமுடியும்.

இதை ஆசிரியர்கள் புரிந்துகொண்டால், வகுப்பறைகள் என்பது மனப்பாட இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக இல்லாமல், கலை மேதைகளையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கும் அறிவுச் சுரங்கங்களாகத் திகழும். பெற்றோர்கள் புரிந்துகொண்டால், பொறியியல், மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காகப் பிள்ளைகளைப் பாடாய்ப் படுத்தமாட்டார்கள். சாமானியன் புரிந்துகொண்டால், எந்த இக்கட்டான சூழலிலும் ‘நான் வாழத் தகுதி இல்லாதவன்’ என்று வாழ்க்கையை முடித்துக்கொள்ளமாட்டான்.

முக்கியமாக, ஆசிரியர்கள் பாடத்தை போதிக்கும் முறையில் இப்பல்முனை நுண்ணறிவுக் கோட்பாட்டினையும் சேர்த்துக்கொண்டால், வகுப்பிலுள்ள அத்தனை மாணவர்களையும் பாடத்தைப் புரிந்துகொண்டு பயனுறச் செய்யமுடியும். ஆக மொத்தத்தில், தன்னுள் இருக்கும் புதையலை கண்டுகொள்ளும் சந்தோஷத்தை ஒவ்வொருவருக்கும் கொடுப்பதே பல்முனை நுண்ணறிவுக் கோட்பாட்டினை (Multiple Intelligence) அடிப்படையாகக் கொண்ட இத்தொடர் கட்டுரையின் நோக்கமாகும்.

பிரியசகி

பிரியசகி

ஆனி ஃப்ளாரன்ஸ் (எ) பிரியசகி என்கிற இவர் தற்போது சென்னை பிராட்வேயில் உள்ள தூய கேப்ரியேல் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 23 ஆண்டுகளாக ஆசிரியர்ப் பணியில் உள்ள இவர், கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் மீது கொண்ட தனிப்பட்ட ஆர்வத்தினால், அதற்கென சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். டான்பாஸ்கோ உளவியல் சேவை நிறுவனமான நிறைவகத்தின் குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக சேவை புரியும் இவர், தம் நிறைவகக் குழுவின் மூலம் பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்குக் கருத்தரங்குகளும், பயிற்சிப் பட்டறைகளும், பொம்மலாட்டம் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். பல முன்னணி தமிழ்த் தொலைக்காட்சிகளில் கல்வி மற்றும் உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
 
அரும்பு மாத இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும் இவர், பல தமிழ் நாளிதழ்கள், மாத இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருவதோடு கவியரங்குகளிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார். கவிச்சக்கரவர்த்தி கம்பன் விருது, சீர்மிகு ஆசிரியர் ரோநார்த் ஆசான், சேவா ரத்னா போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை