27. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி?

27. உங்கள் தோள்பட்டைகளைப் பாதுகாப்பது எப்படி?

நவீன உலகம் நமக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்க பல்வேறு வழி முறைகள் தந்தாலும்

நவீன உலகம் நமக்கு ஆரோக்கியமான வாழ்வை வழங்க பல்வேறு வழி முறைகள் தந்தாலும் ஜிம் மூலம் உடல் நலத்தைப் பேணுவது மிக முக்கிய வழி முறையாகும். பிட்னெஸ் ட்ரைனர்கள் காட்டும் வழிமுறைகள் உடல் வலுப் பெறுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். உடல் நலமே வாழ்விற்கு தேவையான அனைத்தையும் நமக்கு தரும் என்பது நவீனவாதிகளின் கூற்றாகும். ஒருவனுக்கு அனைத்தும் இருந்தும் உடல் நலமும், தன்னிச்சையாக இயங்கும் சக்தியும் இல்லாமல் போனால் அவனை சமூகம் வேறு பார்வையில் பார்க்கும்.

ஜிம்மில் நாம் பயற்சியில் ஈடுபடும் பொழுது பல்வேறு காரணங்களால் வலியோ அல்லது காயமோ ஏற்படலாம். ஜிம்மில் நாம் பல்வேறு வகையான உடற்பயற்சிகளை செய்கிறோம். நாம் செய்வது சரியா தவறா என்பதை பெரும்பாலும் நாம் ஜிம் பயிற்சியாளரிடம் கேட்க கூச்சப்பட்டு தவிர்த்து விடுவோம். ஆனால் அவர்களின் ஆலோசனைகள் மிக முக்கியம். தவறான முறைகளில் உடற்பயற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் மாறுபட்ட விசையானது (WRONG FORCES) தசைகளில் அல்லது மூட்டுகளை (JOINT STRUCTURES) சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிப் போய் தீடீரென ஏற்படுத்திவிடும் காயங்கள் வாழ்நாள் முழுவதும் பாதிப்புக்களை ஏற்படுத்தி ஜிம் பயற்சிகளை தொடரவே முடியாமல் முடக்கி விடும். 

பிசியோதெரபியில் உடற்பயற்சிகளின் போது ஏற்படும் காயங்களை எப்படி தவிர்ப்பது, சரியான முறையில் எப்படி பயற்சிகளை செய்வது மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்க என்ன செய்வது போன்ற ஆலோசனைகள் வழங்கப்படும். ஒருவரின் தோள்மூட்டுகளில் காயங்களையோ அல்லது பாதிப்புகளை ஏற்படுத்த இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

  1. தவறான முறையில் செய்யும் பயற்சிகள் அல்லது எடையை தவறாக கையாள்வது
  2. உடற்பயற்சிக்கு முன்பு தேவையான பரிசோதனைகள் இல்லாமல் போவது (SCREENING PRIOR TO EXERCISE)

ஆய்வுகளின் படி எடை தூக்கும் பயற்சி செய்யும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் எடைக்கு ஏற்ப எடையைக் கணக்கிட்டாலும் தனிப்பட்ட ஒரு தசைக்கு வலு சேர்க்க முயலும் போது அந்தத் தசையின் வலு அல்லது தன்மை (CAPACITY) என்வென்பதை பரிசோதித்த பின்னரே எடைகளை பரிந்துரைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாள்பட்ட காயங்களை நமக்கே தெரியாமல் ஏற்படுத்திவிடும்.

பொதுவாக தவறான முறைகளை கையாளும் போது ஜிம்மில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

  1. தசைபிடிப்பு அல்லது தசை காயம்
  2. கால் சுளுக்கு
  3. தோள்பட்டை காயங்கள்
  4. மூட்டு காயங்கள்
  5. முன் கால் வலி
  6. டெண்டான் அழற்சி
  7. மணிக்கட்டு விலகல் அல்லது அழற்சி

இந்த கட்டுரை தோள்ப்பட்டை காயங்களை பற்றி பேசப்போகிறது, நமது தோள் மூட்டு எப்படி கட்டமைக்கப்பட்டடுள்ளது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆண் மகனுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் இரண்டு புஜங்களும் தோள்பட்டையை சுற்றியுள்ள சதைகளுமாகும். பண்டைய காலத்தில் உருண்டு திரண்ட தோள்களை உடையவனே மாவீரனாக கருதப்பட்டான். அறிவியல்ரீதியாக ஒருவன் சிறப்பாக தனது கைகளையும் கால்களையும் உபயோக்கிக்க வேண்டுமென்றால் அவர்களின் ஆரம்பம் அதாவது அடிப்படை உறுதியாக இருக்க வேண்டும், புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உங்கள் கை விரல்கள் உறுதியான நிலைத்தன்மையுடன் இருக்க அதன் அடிப்படையான இரண்டு தோள்களும் அதனை சுற்றியுள்ள தசைகளும் முக்கியம் (PROXIMAL STABILITY).

தொடரும்...

தி. செந்தில்குமார்

கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசயோ கேர் & க்யூர்

ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி

பெங்களூர்

8147349181

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com