Enable Javscript for better performance
மூட்டு நோய், ஹோமியோ மருந்துகளும்- Dinamani

சுடச்சுட

    

    முடமாக்கும் மூட்டு நோய்களும் குணமாக்கும் ஹோமியோ மருந்துகளும்

    By dn  |   Published on : 27th July 2016 02:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூட்டுவலி நோய் வருவதற்கு வயது வரம்பு இல்லை. சிறு பிராயத்திலும் வருகிறது. முதுமையிலும் வருகிறது. பறவைகள் போல் சுதந்திரமாய் ஓடியாடித் திரிய வேண்டிய இளம் தளிர்களையும் கூட இந்நோய் தாக்கி, முடக்கிப் போடுவது பரிதாபக்குரியது. முதியவர்களுக்கு இந்நோய் தாக்கி முதுமையைச் சுமையாகவும் சோகமாகமாவும் மாற்றி விடுகிறது. மூட்டு வலியால் பாதிக்கப்படைந்த பெரும்பாலனவர்கள் நடைபிணங்களாகவே வாழ்ந்து வருகின்றனர். மூட்டு வலி இல்லாத குடும்பமே இல்லை என்று கூறுமளவு இந்நோய் பரவியுள்ளது. மூட்டுவலி நோய்க்கு Arthritis என்று பெயர். இது லத்தீன் சொல்லாக்கம். Arthritis என்பதற்கு மூட்டு Joint என்றும் itis என்பதற்கு வேக்காடு என்றும் பொருள். ஒன்று அல்லது மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும் அழற்சி வீக்க நோய் Arthritis எனப்படுகிறது.

    மூட்டுவலி நோய்களில் பல வகைகள் உண்டு. Rheumatoid Arthritis எனப்படும் வாதமூட்டு அழற்சி பல மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் மூட்டுகள் மட்டுமன்றி பிற உறுப்புகளும் பாதிக்கக்கூடும். ஆண்களை விடப் பெண்களிடம் அதிகம் காணப்படும். இந்நோய் 20 வயது முதல் 50 வயது வரையிலானவர்களைத் தாக்குகிறது. இந்நோயாளிகளில் 10 முதல் 12 சதவிகிதம் பேர்கள் மட்டும் மரபுக் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள். இந்நோயில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளின் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விரல் மூட்டுகளில் அழற்சி வலியும், விரல்களின் செயல்பாடு குறைந்தும் மூட்டுத் தசைகள் இளைத்தும் காணப்படும். மூட்டுகள் தவிர கண்கள், ஜீரண உறுப்புகள், சுவாச உறுப்புகள், இருதயம் போன்றவையும் பாதிக்கபடக்கூடும். காலப்போக்கில் மூட்டுகளில் உருவ அமைப்பு (Deformitis) உருக்குலைந்து போகும்.

    Osteoi Arthritis எனப்படும் மூட்டுவலி 50 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மூட்டு தேய்மானத்தால் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்புசக்தி குறைபாடு, அதிக உடல் எடை, ஹார்மோன் கோளாறுகள் போன்ற காரணங்களாலும் இந்நோய் ஏற்படுகிறது. உடல் பருமனைச் சுமக்கக் கூடிய எந்த மூட்டிலும் இப்பிரச்னை ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் (Menopause) இக்குறைபாடு தோன்றுகிறது. கர்ப்பப்பையை ஆபரேஷன் மூலம் அகற்றிய பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டு, மூட்டு எலும்புகளில் தேய்மானம் வேகமாக ஏற்படுகிறது.

    நிற்க, நடக்க, படியேற முடியாத அளவு வலியின் தாக்கம் இருக்கும். மூட்டுவலியின் உக்கிரத்தால் மூட்டுகளை அசைக்கக் கூட முடியாத நிலைமை ஏற்படலாம். மூட்டுகளிலுள்ள குருத்தெலும்பு தேய்ந்து உண்டாகும். இந்த வகை மூட்டுச் சிதைவு நோய் பாரம்பரியமாக ஏற்படுவதில்லை.

    Gouty Arthritis எனப்படும் மூட்டு அழற்சி வளர்சிதை மாற்றக் குறைப்பாட்டால் மூட்டுக்களிலுள்ள குருத்தெலும்பில் யூரிக் அமிலப் படிகங்கள் படிவதால் ஏற்படுகிறது. 70 சதவிகித யூரிக் அமிலம் சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இந்த அளவில் குறைவு ஏற்பட்டால் இந்நோய் உருவாகிறது. பெரும்பாலும் கால் கட்டை விரல் மூட்டில் இந்நோய் வீக்கம் வலியுடன் தோன்றுகிறது. அடிபடுவதால், அசைவ உணவுகள், இனிப்பு ரொட்டிகள், காளான்கள், காலிஃபிளவர் போன்ற உணவுகளால், அதிக எடையால், சுற்றுப்புறச் சூழலால், பாரம்பரியக் காரணங்களால் மாதவிடாய் நின்று விடுவதால் இந்நோய் ஏற்படக்கூடும். சிறு மூட்டுகள், முதல் பெரு மூட்டுகள் வரை இந்நோய் தாக்கக்கூடும். ஆண்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்நோய்க்கு, சிகிச்சை பெறும் போதும் உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

    இதுவரை கூறப்பட்ட மூட்டுவலிகளுக்கும் இதர வகை மூட்டுவலிகளுக்கும் அடிப்படையான ஏராளமான காரணங்கள் உள்ளன. அவற்றுள்  முக்கியமானவை உடல்நோய் எதிர்ப்பு மண்டலத்தின் திறன், செயல்பாடு பாதிப்பு, மரபியல் தன்மைகள், கால்ஷியம், யூரேட் உப்பு படிதல், தொற்று நோய்கள் ஈரமான வசிப்பிடம், அதிக உணவு, அதிக உடல் எடை, மது முறையற்ற வாழ்க்கை, இத்தகைய காரணங்களால் மூட்டுகள், சைனோவியல் உறை, குருத்தெலும்பு, இணைப்பு திசுக்கள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. இவற்றுடன் ஜீரண உறுப்புகள், சுரப்பிகள், கல்லீரல், மண்ணீரல் இருதயம் போன்றவற்றின் பாதிப்பும் இணைந்து கொள்ளும் போது ஆரோக்கியத்தின் அஸ்திவாரமே தகர்கிறது.

    மூட்டுவலி நோயாளிகளுக்கு ஹோமியோபதி சிகிச்சையளிக்கும் போது அவர்களது உடல், மன இயல்புகளை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்யப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தைப் பொறுத்தவரை முட்டுநீர் சுரக்கும் உறையை வெட்டி எடுத்தல் (Synovectomy) துளை மூட்டு அறுவைசிகிச்சை (Arthroscopic Surgery) செயற்கை மூட்டு பொருத்துதல் (Joint Replacement) போன்ற முறைகளைக் கையாளுகின்றனர். உடலியக்கப் பயிற்சி (Physio Therapy) மின்வெப்ப சிகிச்சை (Electrical Pads) பனிக்கட்டி, மெழுகு ஒத்தடம் (Ice and Wax Path) ஆகியவற்றோடு ஸ்ட்ராய்டு மருந்துகள், வலி நிவாரணிகளை அள்ளி வழங்குகின்றனர். இவை எல்லாம் தருவது தற்கால நிவாரணமே! மனநிம்மதி இழந்தவர்களுக்கும், விரக்தி என்ற பள்ளத்தில் விழுந்து கிடப்பவர்களுக்கும், மன எழுச்சிகளை அடக்கிக் கொண்டே இருப்பவர்களுக்கும் கூட மூட்டுவலி வருகிறது. ஆங்கில மருத்துவத்தில் இது போன்ற நோயாளிகளை மனவியல் நிபுணர்களும், எலும்பு நிபுணர்களும் இணைந்து சிகிச்சை தர வேண்டியுள்ளது. ஆயினும் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற கதையாய் எவ்வளவு செலவழித்தாலும் மூட்டு வலி நோயாளிகள் ஆங்கில மருத்துவ சிகிச்சையால் முடமாகிக் கொண்டே போவதைத் தான் பார்க்கிறோம்.

    மூட்டு அழற்சி வலி உள்ளவர்களுக்கு ஹோமியோபதி மருத்துவமே உகந்தது நோயின் நாட்பட்ட தன்மை, முற்றிய நிலையிலும் கூட அதிகபட்ச நிவாரணம் வழங்குகிறது.

    மூட்டு அழற்சி வலியுள்ளவர்கள் உடல் எடை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறுநீரகத்தின் செயல்பாட்டுத் திறன் குறைவதும், உணவில் கொழுப்பு, உப்பு அதிகரிப்பதும், இனிப்புப் பண்டங்கள் அதிகம் உண்பதும், வரைமுறையற்ற உணவுப் பழக்கங்களும் உடல் உழைப்பற்ற தன்மையும், உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள். மூட்டு வலி நோயாளிகள் கண்ட கண்ட ஆங்கில வலி நிவாரணிகளை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும். இறைச்சி உண்பதைக் குறைக்க வேண்டும். மீன் வகைகள் மூட்டு அலர்ஜியை ஓரளவு கட்டுப்படுத்த உதவுமென்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    மூட்டுவலி நோய்களுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அரிய பல மருந்துகள் உள்ளன. உரிய சிகிச்சையோடு தேவையான அளவு உடற்பயிற்சியும்,  உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.

    குறுகிய கால மூட்டுவலி நோய்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

    அகோனைட், ஆண்டிமோனியம், குரூடம், ஆர்னிகா, பெல்லடோனா, பிரையோனியா, கோல்சிகம், பெர்ரம்பாஸ், கால்மியா, லேடம், ரஸ்டாக்ஸ், ரூடா.

    நாள்பட்ட மூட்டுவலி நோய்க்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

    ஆர்னிகா, ஆர்சனிகம், அர்புடஸ், பென்ஜாயிக், ஆட், காஸ்டிகம், சிமிசிபியூகா, கோல்சிகம், குவாய்கம், கால்மியா, லாச்சஸிஸ், லேடம், மங்கானம், அசடிகம், நேட்ரம் சல்ப், நேட்ரம்பாஸ்,  பல்சடில்லா, ரோடோடென், ரூடா, ஸ்டெல்லேரியா, சல்பர்.

    இடம் விட்டு இடம் தாவும் மூட்டுவலி நோய்குறிகளுக்குப் பயன்படும் மருந்துகள்:

    காலிசல்ப், கால்மியா, மாக்னோலியா, பைட்டோலக்கா, பல்சடில்லா, ஸ்டெல்லேரியா, வலேரியனா, காலோபைலம்.

    கைவிரல் மூட்டுகள், மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகளைத் தாக்கும் மூட்டுவலி நோய்களுக்குரிய மருந்துகள்:

    அக்டியா, ஸ்பைகேடா, ஆண்டிமோனியம், குரூடம், ஆர்னிகா, பிரையோனியா, காலோபைலம், காஸ்டிகம், கோல்சிகம், லேடம், லைகோ, நேர்டம்மூர், பெட்ரோலியம், ரஸ்டாக்ஸ், ரூடா, சபடில்லா, சிலிகா, சல்பர், சபீனா.

    இருதயத்தையும் சேர்த்து பாதிக்கும் மூட்டுவீக்க நோய்குறிகளுக்குரிய மருந்துகள் :

    அப்ரோடனம், பென்ஜாய்க் ஆசிட், கோல்சிகம், டிஜிடாலிஸ், கால்மியா, லிதியம் கார்ப், நக்ஸ்மாஸ், வெராட்ரம் ஆல்பம், லைகோபஸ், ஆர்சனிகம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai