இன்றைய மருத்துவ சிந்தனை: அதிவிடயம்
By DIN | Published On : 22nd December 2017 12:00 AM | Last Updated : 22nd December 2017 12:00 AM | அ+அ அ- |

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
அதிவிடயம்:
- சர்க்கரையை கட்டுப்படுத்த அதிவிடயம் , ஆவாரம் பூ , கடுக்காய் இவை அனைத்தையும் தலா (100 கிராம் ) எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவற்றை தினமும் காலை மாலை என இரு வேளையும் தலா இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- புண்கள் ஆற அதிவிடயத்தைத் தண்ணீரில் போட்டு கஷாயம் காய்ச்சி அவற்றை புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறிவிடும்.
- அதிக ரத்தப் போக்கு நிற்க அதிவிடயம் , நாவல் கொட்டை தலா (100 கிராம்) எடுத்து அரைத்துக் கொள்ளவும் .இவறில் இரண்டு கிராம் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான ரத்தப் போக்கு உடனே நிற்கும்.
- பேதி உடனே நிற்க அதிவிடயம் , கடுக்காய் , ஒமம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துக்கொள்ளவும். இவற்றில் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பேதியும் உடனே நிற்கும்.
- உடல் வலிமை பெற அதிவிடயம் , எள் , வெள்ளரி விதை இவை அனைத்தையும் தலா (100 கிராம்) எடுத்து அரைத்துக் கொள்ளவும். இவற்றில் இரண்டு கிராம் அளவு எடுத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com