சுடச்சுட

  
  Euphorbia-3

   

  அம்மான் பச்சரிசி, கீழாநெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து 6 மாதங்களுக்குத் தினமும் காலை மாலை என இருவேளையும் 10 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்டம் குணமாகும்.

  அம்மான் பச்சரிசிக் கீரை, வெள்ளருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

  அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மிளகு (3), வேப்பிலை (5), இரண்டையும் சேர்த்து அரைத்து அதிகாலையில் 48 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

  அம்மான் பச்சரிசிக் கீரையுடன் சிறிது மஞ்சள், ஒமம்  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.

  அம்மான் பச்சரிசிக் கீரையுடன் கீழாநெல்லி இலையையும் சம அளவு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலக்கி காலை மாலை என இருவேளையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ,தூக்கத்தில் கனவு நிலையில் விந்து வெளியேறுதல் குறைபாடு சரியாகும்.

  பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்பால் சுரப்பு குறைவாக இருக்கும்.அப்படிப்பட்டவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் தாய்பால் அதிகமாகச் சுரக்கும்.

  KOVAI  HERBAL CARE

  கோவை பாலா ,

  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

  Cell  :  96557 58609

  Covaibala15@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai