சுடச்சுட

    
    1

     

    வேளைக் கீரை, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உள் மூலம் குணமாகும்.

    வேளைக் கீரை, இஞ்சி, மிளகு, வெல்லம் அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து அதிகாலையில் 15 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள்களாகத் தொல்லை தரும் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

    வேளைக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதிகாலையில் பத்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

    வேளைக் கீரை, நொச்சி இலை தலா 10 கிராம் எடுத்து மிளகு (20) ,மஞ்சள் (சிறிதளவு) சேர்த்து தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து, அந்தத் தடண்ணீரில் முகம் கழுவிவந்தால் தலைபாரம், சைனஸ் தொல்லைகள் தீரும்.

    வேளைக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அடி வயிற்றில் பற்றுப் போட்டால் தடைபட்ட மாத விலக்கு சீராகும்.

    வேளைக் கீரை, முடக்கத்தான் கீரை, உளுந்து , மஞ்சள் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து அரைத்துப் பற்றுப் போட்டுவந்தால் கை, கால்  மற்றும் இடுப்பு வலிகள் குணமாகும்.

    வேளைக் கீரை (கால் கிலோ) உலர்த்தி, வாய் விளங்கம், ஒமம், மிளகு ஆகியவற்றை ( தலா 50 கிராம்) சேர்த்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை என இருவேளையும் வெந்நீரில் இரண்டு கிராம் அளவு கலந்து குடித்து வந்தால் அனைத்து விதமான வாயுக் கோளாறுகளும் விலகும்.

    KOVAI  HERBAL CARE

    கோவை பாலா ,

    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

    Cell  :  96557 58609

    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai