சுடச்சுட

    
    Puliarai-keerai

    புளியாரைக் கீரைச் சாற்றில் ஒமத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    புளியாரைக் கீரைச் சாற்றில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

    புளியிரைக் கீரைச் சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.

    புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்தளிர் , மிளகு (4) , மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் தூய்மையாகி , நோய் எதிர்ப்பச் சக்தி அதிகரிக்கும்..

    புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாகும்.

    புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.

    புளியாரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.

    KOVAI  HERBAL CARE

    கோவை பாலா ,

    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

    Cell  :  96557 58609

    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai