Enable Javscript for better performance
இன்றைய மருத்துவ சிந்தனை பொடுதலைக் கீரை- Dinamani

சுடச்சுட

    

    இன்றைய மருத்துவ சிந்தனை பொடுதலைக் கீரை

    Published on : 08th February 2017 10:55 AM  |   அ+அ அ-   |    |  

    55350

    பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். 

    பொடுதலைக் கீரையை அரைத்து, ஆசனவாய்க் கட்டிகள் மீது கட்டினால் அவை பழுத்து உடைந்து குணமாகும்.மேலும் புண் ,அக்கிப் புண், நெறிக்கட்டி போன்றவற்றின் மீது பூசினால் அவை குணமாகும்.

    பொடுதலைக் கீரையுடன் சம அளவு வெள்ளருக்கு சேர்த்து அரைத்து மூன்று சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை நிரந்தரமாகத் தீரும்.

    பொடுதலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சளி, கபம், நுரையீரல் நோய்கள் குணமாகும்.

    பொடுதலைக் கீரைச் சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெய்யில் குழைத்து , தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால், பேன், பொடுகு பிரச்சனைகள் நிரந்தரமாகத் தீரும்.

    பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கி , சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

    KOVAI  HERBAL CARE

    கோவை பாலா ,

    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

    Cell  :  96557 58609

    Covaibala15@gmail.com

    kattana sevai