சுடச்சுட

  
  24-commelina3000

  பரவலாகக் காணப்பட்டாலும் கானாம் வாழைக் கீரையைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம். இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. மழைக்காலத்தில் சாலை ஓரங்களிலும், காலியாக கிடக்கும் நிலங்களிலும் செழித்து வளரும் செடி இது.

  கானாம் கீரையை பக்குவமாக சமைத்து சாப்பிட்டால் பலன்களை பெறலாம்.

  கானாம் வாழைக் கீரை (உலர்த்தியது-100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின்  அனைத்தும் தலா 100 கிராம் எடுத்துப்பொடியாக்கிதினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்சனை தீரும்.

  கானாம் வாழை கீரைச் சாறெடுத்து அதனுடன் ஜாதிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்,  ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.

  கானாம்வாழைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து,தேனில் குழைத்துச் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால்  காம  உணர்வு அதிகரிக்கும்.

  கானாம் வாழைக் கீரையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

  கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப் போட்டால் அவை உடனே ஆறிவிடும்.

  கானாம் வாழைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் தீரும். கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.

  கானாம் வாழைக் கீரையுடன் சிறிது மிளகு(10) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜுரம் உடனே குணமாகும். காய்ச்சால் குணமாக எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும்.

  நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், சிறிதளவு முருங்கைப் பூவையும், சிறிது துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் ஊற்றி சாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

  கானாம்வாழைக் கீரையுடன் இளம் வேப்பம் துளிர், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மையாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுவடையும். உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகும். கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். உணவில் இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும்.

  கானாம் வாழைக் கீரைச் சாறில் கசகசாவை ஊற வைத்து அரைத்து, தேனில் குழைத்துச் சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும். கானாம்வாழைக் கீரையை கொட்டைப் பாக்கு சேர்தது அரைத்துச் சாப்பிட்டால் போகம் நீடிக்கும். காமம் சார்ந்த உணர்வும், ஆண்மையும் அதிகரிக்கும்.

  கானாம் வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai