சுடச்சுட

    
    nilavarai-choornam

    நிலாவரை, சோம்பு, சீரகம், அதிமதுரம் அனைத்தையும் சம அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் தலை வலி, ஒற்றைத் தலைவலி தீரும்.

    நிலாவரை, சோற்றுக் கற்றாழை சோறு தலா 5 கிராம் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் தீரும்.

    நிலாவரை, பொன்னாவரை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.

    நிலாவரைப் பூ, ஆவாரம் பூ, சரக்கொன்றைப் பூ, பொன்னாவரைப் பூ, செம்பருத்திப் பூ சுருள் பட்டை இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து பீட்ரூட் சாற்றில் (அரை லிட்டர்) இரண்டு நாள் ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும். முடியும் நன்றாகச் செழித்து வளரும்.

    நிலாவரை, ஆவாரை, பொன்னாங்கண்ணி இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து இரவில் மட்டும் 2 கிராம் பொடியை ஆறு மாதங்கள் வரை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

    நிலாவரை, சிறியாநங்கை, மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து படை, நமைச்சல் உள்ள இடங்களில் தேய்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

    KOVAI  HERBAL CARE
    கோவை பாலா ,
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
    Cell  :  96557 58609
    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai