சுடச்சுட

  
  14732517116_20c3634368_b

   

  பனை வெல்லம், சுக்கு, தனியா இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவை குணமாகும்.

  பனை நுங்கின் மேல் தோல், மாதுளம் பழத் தோல், வில்வ ஓடு இவை அனைத்தையும் தலா 100  கிராம் எடுத்துக் காயவைத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் பொடியை காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள், பால்வினை நோய்கள், வெள்ளைப் படுதல் போன்றவை குணமாகும்.

  நிலப் பனங் கிழங்கை அவித்துச் சாப்பிட்டு வந்தால் அபார தாது புஷ்டி உண்டாகும். ஆண்மைக் குறைவும் விலகும்.

  பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய், உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்

  பதநீர் குடிப்பதால் உண்டாகும் பயன்

  பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் பதநீரை 40 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

  கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது.

  இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

  இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai