சுடச்சுட

  
  rose_petals

   

  ரோஜாப் பூ, வெள்ளை மிளகு, சுக்கு  இவை அனைத்தையும் தலா 50 கிராம் எடுத்து அரைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவில் நன்றாகத் தூக்கமும் வரும்.

  ரோஜாப் பூ, நிலாவரை, வாய்விளங்கம் இவை அனைத்தையும் தலா 100 கிராம்  எடுத்துப் பொடி  செய்து, தினமும் இரவில் 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு உடைந்து மலம் எளிதில் வெளியாகும்.

  உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து, தினமும் காலை மாலை என இருவேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய் குணமாகும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.

  ரோஜா, செம்பருத்தி, சிறு பருப்பு, அதிமதுரம் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்துவந்தால் உடல் வனப்பு பெறும்.

  ரோஜா இதழ்களைக் காயவைத்து கஷாயம் வைத்துக் தினந்தோறும் குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும்.

  உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.

  உலர்ந்த ரோஜா இதழ்களை (ஒரு கைப்பிடி) இரண்டு  டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும் தேவையான அளவு சர்க்கரை  சேர்த்துக் கலக்கி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் அறவே நீங்கிவிடும்.

  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai