சுடச்சுட

  
  masala_buttermilk

  மோர் - தேவையான அளவு 
  பூண்டு - 2 பற்கள் 
  சிறிய வெங்காயம் - 5
  கறிவேப்பிலை - 10 இலை 
  இஞ்சி - சிறிய துண்டு 
  பச்சை மிளகாய் - 2
  உப்பு - தேவையான அளவு 
  தாளிக்க கடுகு - 1/4 தேக்கரண்டி

  மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டவும்.

  வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகை தாளித்து மோரில் கலக்கவும்

  பலன்கள்

  மோரில் வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. மசாலா மோரில் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது.எனவே சத்துடன் சுவையும் சேர்ந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

  கோடை காலத்தில் அடிகடி குடிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

  உடல் சூட்டை தணிக்கும். பசியின்மையால் அவதியிறும் போது, ஒரு தம்ளர் மசாலா மோரைப் பருகினால் அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai