தேங்காயை எப்படி சரிபாதியாக உடைப்பது?

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்திமாவு ஒட்டாது
தேங்காயை எப்படி சரிபாதியாக உடைப்பது?

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பை தடவிக் கொண்டால் கையில் சப்பாத்திமாவு ஒட்டாது.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கெட்டியாகிவிடும் அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

நெய் ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம் காய்ந்த மிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு  வறுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

தோசை சுடும்போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்து போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்துவிட்டு எண்ணெய்யில் பொரித்தால் நன்றாக பொரியும்.

காராமணியை ஊற வைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து வடை சுட்டு சுடச்சுட சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஜாங்கிரி செய்யும்போது பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்புப் போட்டு ஊற வைத்து சாப்பிட்டு பாருங்களேன். சூப்பர் ருசிதான்!

வத்தக்குழம்பு செய்யும்போது கடைசியாக மஞ்சள் மிளகுத் தூளைக் கலந்தால் குழம்பு ருசியாக இருக்கும்.

- சி. பன்னீர்செல்வம்

இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

ரசத்தில் புளியை குறைத்து, மிளகு - சீரகப் பொடியை கூடுதலாக சேர்த்தால் உடலுக்கு நல்லது.

- பொ. பாலாஜி

பீட்ரூட், இஞ்சி, தேன், எலுமிச்சம் பழச்சாறு நீர் கலந்து மிக்ஸியில் அடித்து அருந்த - ரத்த விருத்தி, நெஞ்சு எரிச்சல் தரும்.

பிரெட் துண்டில் ஓரத்தை நீக்கிவிட்டு உதிர்த்து அதில் பேரீச்சை துண்டுகள், பன்னீர் துண்டுகள், தக்காளி கெட்சப் கலந்து உருண்டையாக்கி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான ஸ்நாக்ஸ் ரெடி.

- ஆர். பிரபா, திருநெல்வேலி. 

இட்லி, தோசை மாவு புளித்துவிட்டால், அதில் சுக்குப் பொடி கலந்து ஊத்தப்பம்  
செய்தால் எளிதில் ஜீரணமாகும்.

- கே.பிரபாவதி

தேங்காய் சரிபாதியாக உடைய வேண்டுமா முதலில் தேங்காயை தண்ணீரில் நனைத்து பின்பு உடைக்க வேண்டும்.

- பி.பாலாஜிகணேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com