ஆடி மாதத்தில் மோர்க் கூழ் குடித்தால் என்ன ஆகும்?

மோரில் ரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோ ஆக்டிவ் புரோட்டீன்,
ஆடி மாதத்தில் மோர்க் கூழ் குடித்தால் என்ன ஆகும்?

அதென்ன மோர்க் கூழ்? அதைக் குடித்தால் என்ன ஆகும். இது சாதாரணமாக வீட்டில் தயாரிக்கப்படும் கூழ் தான். இதைத் தயாரிப்பதும் மிகவும் சுலபம். உடல் இளைக்க விரும்புவர்கள் தினமும் இதைக் குடித்தால் கை மேல் பலன் கிடைக்கும். தவிர ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் பிராண வாயுவின் சக்தி  வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்குமாம். 

இவைகளை பயன்படுத்துவதில், ஒரு முக்கியமான விஞ்ஞானரீதியான காரணமும் உண்டு. இந்த நாட்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் போது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலையைப்பற்றி கூறவே வேண்டாம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகளுக்கு உண்டு. அதே போல் மோர் இயற்கையான கூலர். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

மோரில் ரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோ ஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் நிறைந்துள்ளது என உணவுச் சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும். ஆடி மாதத்தில் மட்டுமல்ல எல்லா மாதங்களிலும் இந்த மோர்க் கூழ் தயாரித்து குடித்தால் உடலில் வைட்டமின் சத்துப் பிரச்னைகள் ஏற்படாது.

மோர்க் கூழ் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

மோர் – 2 கப்
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 கப்
சோயா மாவு – 1/4 கப்
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – சிறிதளவு
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம், மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த உடன் அதில் தண்ணீர் ஊற்றவும்.
  • உப்புப் போட்டு கொதி வந்தவுடன், அரிசிமாவு, கோதுமை மாவு, சோயா மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொண்டு, கொதிவந்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டுக் கிளறவும்.
  • லேசாக கெட்டியானவுடன் அதில் மோர்விட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • மோரும் கூழும் நன்றாகக் கலந்தவுடன் இறக்கி வைக்கவும்
  • சுவையும் சத்தும் நிறைந்த மோர்க் கூழ் தயார். எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.

இந்தக் கூழை சூடாகவும் குடிக்கலாம். சற்று ஆறியவுடன் இஞ்சித் துவையல் தொட்டும் சாப்பிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com