சுடச்சுட

  
  Ruta-21


  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

  அறுவதா/சதாப்பு இலை:

  • அறுவதா இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப ¼ முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புசளி, பால்மந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.
    
  • அறுவதா இலையை உலரவைத்து நெருப்பிலிட்டு  அவற்றில் இருந்து வரும் புகையை மென்மையாகக் சுவாசித்து வந்தால் இருமல் தணியும்.
    
  • அறுவதா இலையை அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
    
  • அறுவதா இலையுடன் இஞ்சி  (ஒரு துண்டு)  சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மார்புச் சளி விலகும்.
    
  • அறுவதா இலைச் சாற்றுடன் ஒமத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயு , வயிற்றுப் பொருமல் , பெரு வயிறு போன்றவை குணமாகும்.
    
  • அறுவதா இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வந்தால்  குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.
    

  குறிப்பு: 
  அறுவதா இலை மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை என்றும் வழங்கப் பெறும். இதன் இலை மருத்துவப் பயனுடையது.


  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai