சுடச்சுட

  
  the-banyan-tree


  உணவிலும் மாற்றம்!!!
  உடலிலும் மாற்றம்!!!!

   ஆலமரம்:

  • ஆல மரத்தின் இளம் பிஞ்சு வேர்களுடன் செம்பருத்திப் பூவையும் சேர்த்துக் காயவைத்து இடித்துப் பொடி செய்து , தேங்காய் எண்ணெய்யில் போட்டு ஊறவைத்து தலையில் தேய்த்துக்கொண்டு வந்தால் முடி கறுப்பாக வளரும்.
    
  • இளம் ஆலம் விழுதை (20 கிராம்) அரைத்து , பசும் பாலில் கலந்து  மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால் கரு உண்டாகும்.
    
  • ஆல மர விழுது (10 கிராம்) , ஆலம் விதை (10) இவை இரண்டையும் எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் அல்சர் குணமாகும்.
    
  • ஆல மர விதைகளையும் , கொழுந்து இலைகளையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.
    
  • ஆல மர இலைகளை எரித்து , ஆளி விதை எண்ணெய்யில் குழைத்து சொட்டை விழுந்த இடத்தில் தடவிவந்தால் அந்த இடத்தில் விரைவில் முடி முளைக்கும்.
    
  • ஆல மர இலைகளைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
    
  • ஆல மரப் பட்டையைப் பொடி செய்து பல் துலக்கிவந்தால் பல்வலி , பல் கூச்சம்  உள்ளிட்ட பல் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும்.

                         

  KOVAI  HERBAL CARE
  கோவை பாலா ,
  இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
  Cell  :  96557 58609
  Covaibala15@gmail.com

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai