காதுகளில் குளிர்ந்த காற்று அல்லது குளிர்ந்த நீர்பட்டால் உண்டாகும் அதிகமான வலி நீங்க!

காதுதான் நமது உடலின் தெர்மா மீட்டர்.தசைகள் வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் விரிந்து சுருங்குகின்றன.
காதுகளில் குளிர்ந்த காற்று அல்லது குளிர்ந்த நீர்பட்டால் உண்டாகும் அதிகமான வலி நீங்க!

அறிகுறிகள் : காதுதான் நமது உடலின் தெர்மா மீட்டர். தசைகள் வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் விரிந்து சுருங்குகின்றன. எனவே காதில் குளிர்ச்சி பட்டால் கடுமையான வலி மற்றும் வேதனை ஏற்படும். குளிர்ந்த காற்று அல்லது நீர் பட்டால் வலி ஏற்படுவதிலிருந்து விடுபட.

மண்டலம் - தசை மண்டலம்
காய் - அரசாணிக்காய், பரங்கிக்காய் , மஞ்சள் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நெருப்பு
மாதம் - ஆவணி
குணம் - அன்பு 
ராசி / லக்கினம் - சிம்மம்

சத்துக்கள் : வைட்டமின் பி1, பி2, பி6, டி, சி மற்றும் பீட்டா கரோட்டீன், நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், காப்பர் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

தீர்வு :  அரசாணிக்காய் (100 கிராம்) ,  கொத்தவரங்காய் (5) இவை இரண்டையும் எடுத்து நன்றாக கழுவி தோலுடன் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து  இரு வேளை  வெறும் வயிற்றில் ஜூஸாக குடிக்கலாம்  அல்லது இவற்றை போதுமான அளவு எடுத்து நீராவியில் வேகவைத்து பொறியலாகவும் சாப்பிட்டு வந்தால் காதுகளில் குளிர்ந்த காற்று அல்லது குளிர்ந்த நீர்பட்டால் உண்டாகும் அதிகமான வலி நீங்கும். பின்பு பசித்தால் உணவு எடுத்துக்கொள்ளுங்கள்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com