பிஸ்கெட் நல்லதா கெட்டதா? இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

பிஸ்கட் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படும்.  
பிஸ்கெட் நல்லதா கெட்டதா? இந்த 5 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் சாப்பிட எளிதான ஸ்னாக்ஸ் என்றால் அது பிஸ்கெட் தான். ஆனால் பிஸ்கெட் சாப்பிடுவது உடல்நலத்துக்குக் கெடுதல் என்கிறார்கள். இது உண்மையா என்று ஆராய்ந்து பார்த்தால் பதில் அதிர்ச்சி தருவதாகக்தான் உள்ளது.

  1. பிஸ்கெட் விரைவில் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படும். அவற்றில் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது, ஹைட்ரஜனேட்டட் கொழுப்புச் சத்தை உருவாக்கும் டிரான்ஸ்ஃபேட் அமிலத்தின் சதவிகிதம் அதிகப்படியாக இருந்தால் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
  2. பிஸ்கெட் மிருதுவாக இருக்க, அதில் குளூட்டன் எனப்படும் பொருள் சேர்க்கப்படுகிறது. பிஸ்கெட் வகை வகையாக, டிசைன் டிசைனாக கடைகளில் விற்கப்படுகிறது. இதை தயாரிக்க சோடியம் பை கார்பனேட், ஈஸ்ட், குளுக்கோஸ் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
  3. பிஸ்கெட் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது, காரணம் சுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரையை இதன் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். சாதாரண பிஸ்கெட்டுகளை விட க்ரீம் பிஸ்கெட்டுகளில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
  4. பிஸ்கெட்டில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், உடல் எடை அதிகரிக்கும். ஒபிஸிடி உள்ளிட்ட பிரச்னைகளை உருவாக்கிவிடும்.
  5. பிஸ்கெட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் சிறுநீரக கல், நீரழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்புகள் உள்ளிட்ட சில பிரச்னைகளை ஏற்படுத்தும்

இப்ப நீங்களே சொல்லுங்க, பிஸ்கெட் நல்லதா கெட்டதா? அமிர்தமாக இருந்தாலும் கூட அளவுக்கு மிஞ்சினால் அது கெடுதல்தான். எனவே ஆசைக்காக ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட்டுகளை சாப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் வேர்க்கடலை மிட்டாய், சத்துமாவு லட்டு போன்ற வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்னாக்ஸை சாப்பிட வைத்து அவர்கள் ஆரோக்கியத்தை பலப்படுத்துங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com