மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து!

அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி, நரம்பக் கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம்.
மலச்சிக்கலுக்கு இதோ ஒரு மருந்து!
  • அவரைக் காய்களை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புத்தளர்ச்சி, நரம்பக் கோளாறு போன்ற தொல்லைகளில் இருந்து குணம் பெறலாம். இதில் உள்ள வைட்டமின் சி உடலில் சோர்வு ஏற்படாமல் தடுத்து உடலைப் பாதுகாக்கும்.
  • அவரைக்காயில் காணப்படும் நார்ப்பொருள் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். 
  • அவரைக்காய் வயிறு எரிச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.
  • சளி, இருமல் போன்றவற்றால் அவதிபடுபவர்களுக்கு அவரை சூப் நல்ல பலனைக் கொடுக்கும்.
  • ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் அடிக்கடி அவரைக்காய்களை பயன்படுத்தி வர, இதிலுள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, ரத்தக் குழாய்களில் கொழுப்புப் பொருட்கள் அடைத்துக் கொள்வதையும் தடுத்து, மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது.       
  • தூக்கமின்மையால் அவதிபடுவோர்கள் இரவு உணவில் அவரைக் காய்களை பயன்படுத்தி வர சுகமான தூக்கம் கிடைக்கும்.
  • நீரழிவு நோயினால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்றவை நீங்கும்.
  • இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்து சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • வயதானவர்கள் அவரைக்காய்களை உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர தசைநார்கள் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி பெருகி முதுமையில் நோய்களின் தாக்கமும் குறையும்.
  • நோய்க்கு மருந்து சாப்பிடும் காலத்திலும், விரதம் இருக்கும் காலத்திலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு பலத்தை கொடுப்பதுடன், விரத காலத்தில் மனஅமைதியை அதிகரித்து சிந்தனையை தெளிவுப்படுத்தும்.

காய்கள், கனிகள், கீரைகள், தானியங்கள்' என்னும் நூலிலிருந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com