Enable Javscript for better performance
skin care tips | தோலுக்கு பளபளப்பை கொடுக்க உதவும் கஞ்சி- Dinamani

சுடச்சுட

    

    முக வறட்சி நீங்கி தோலுக்கு பளபளப்பை கொடுக்கும் உணவு!

    By கோவை பாலா  |   Published on : 04th December 2019 12:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kidney-health-diet-detox-toxins-naturally-with-food

     

    கோவக்காய் காலா நமக் அரிசிக் கஞ்சி

    தேவையான பொருட்கள்

    கோவக்காய் - 10
    கேரட் - 5
    காலா நமக் அரிசி.  -  100  கிராம்
    தேங்காய் துருவல்.   -  100 கிராம்

    செய்முறை
     

    • முதலில் காலா நமக் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
    • கோவக்காய் மற்றும் கேரட்டை நறுக்கி நீராவியில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
    • வேக வைத்த காயை மிக்ஸியில் போட்டு அரைத்து  விழுதாக்கி வைத்துக் கொள்ளவும்.
    • பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள காலா நமக் அரிசியை போட்டு 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
    • நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
    • பின்பு அதில் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து கலந்து குடிக்கவும்.

    பயன்கள்

    • இந்தக் கஞ்சியில் அதிகமான தாது உப்புகள் நிறைந்துள்ளது.
    • இதனை முகவறட்சி மற்றும் உடல் வறட்சி உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் வறட்சி அனைத்தும் நீங்கி மேனிக்கு பளபளப்பை கொடுக்கும்

    படுக்கப் போகும் முன்

    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு

    அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

    பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா,
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
    Cell : 96557 58609, 73737 10080
    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai