தாம்பத்ய உணர்வுகளை அதிகரிக்க உதவும் சூப்

முதலில் கொடிப் பசலைக் கீரையைச்  சுத்தம் செய்து கொள்ளவும்.
couple
couple

கொடிப் பசலைக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

கொடிப் பசலைக் கீரை -  200  கிராம்
தக்காளி -  3
பெரிய வெங்காயம்   -  2
பூண்டு  -  6 பல்
மிளகுத் தூள் -  ஒரு ஸ்பூன்
வெண்ணெய் -   50  கிராம்
கார்ன் ஃபிளவர்   -  3  ஸ்பூன்

செய்முறை

  • முதலில் கொடிப் பசலைக் கீரையைச்  சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.
  • பின்பு கொடிப் பசலைக் கீரை மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யைப் போட்டு அதில் பூண்டை சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு அதில் மிளகுத் தூள் மற்றும் உப்பு  சேர்த்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதியுள்ள வெண்ணெய்யைப் போட்டு உருக்கி அதில் கார்ன் ஃபிளவரை போட்டு வதக்கி அதில் வடிகட்டி வைத்துள்ள சூப்பைக் கொட்டி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு உப்பும் சேர்த்துக்கொள்ளலாம்.

பயன்கள் 

  • இந்த சூப் காம உணர்வை அதிகரிக்க உதவும்.
  • உடல் சூட்டை தணித்து மலச்சிக்கலையும் போக்கும். ஆனால் இந்த சூப்பை அதிகமாக குடித்தால் ஒரு சிலருக்கு  கபத்தை அதிகரிக்கும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com