சுடச்சுட

  

  உறவு வேட்கையைத் தூண்டி எல்லையில்லா இன்பத்தை தரும் உணவு

  By கோவை பாலா  |   Published on : 17th July 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  couples


  பசலைக் கீரைக் காரக் குழம்பு
   
  தேவையான பொருட்கள்

  பசலைக் கீரை - ஒரு கட்டு
  பச்சை மொச்சைக் கொட்டை - 200 கிராம்
  மிளகு -  மூன்று ஸ்பூன்
  பூண்டு - 10 பல்
  வெங்காயம் - ஒன்று
  தக்காளி - ஒன்று 
  சீரகம், மஞ்சள், உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு   

  செய்முறை : முதலில் கீரையை சுத்தம் செய்து அரிந்து அதனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து பின்பு நன்றாக கடைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளியை அரிந்துப் போட்டு வதக்கி அதனுடன் சீரகத்தைப் பொடி செய்து சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் பூண்டையும் நறுக்கிப் போட்டு சேர்த்து வதக்கி பின்பு பச்சை மொச்சைக் கொட்டை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பிறகு புளியைக் கரைத்துச் சேர்க்கவும். மொச்சைக் கொட்டை நன்கு வெந்தப் பிறகு, அதனுடன் கீரையையும் சேர்த்து  நன்றாக கலக்கி இறுதியில் கடுகு, உளுந்தப் பருப்பு போட்டு தாளித்து இறக்கவும்.

  பலன்கள் : இந்த பசலைக் கீரைக் காரக் குழம்பை உடல் வேட்கையில் திருப்தி இல்லாதவர்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உறவு வேட்கையில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும்.

  இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai