தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது!

முதலில் கீரையைச் சுத்தம் செய்து  அதனுடன் துவரம் பருப்பு, பூண்டு,  சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும்.
தூக்கமின்மையினால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு இது!

 
புளியாரைக் கீரை கடைசல்

தேவையான பொருட்கள்

புளியாரைக் கீரை - 200  கிராம்
பூண்டு - 4 பல்
துவரம் பருப்பு.                -   50 கிராம்
தேங்காய்ப் பால் - 100  மி.லி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் கீரையைச் சுத்தம் செய்து  அதனுடன் துவரம் பருப்பு, பூண்டு,  சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வேக வைக்கவும். வேகவைத்த கீரையை மத்தால் கடைந்து  அதில் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  ஒரு கொதி வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி விடவும். பிறகு வாணலியில் சிறிது எண்ணெய், கடுகு  ஆகியவற்றை தாளித்து கீரையுடன் சேர்த்து கலக்கி கொளளவும்.

பயன்கள்

இந்த புளியாரைக் கீரைக் கடைசலை பல வருடங்களாக உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை எடுத்து கொள்பவர்களும், தூக்கமே வராமல் அவதிப்படுபவர்களும் தொடர்ந்து உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com