இரவு படுக்கப் போகும் முன் இதை செய்யுங்கள்

முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்
time
time

அரசாணிக்காய் சிறுதானியக் கஞ்சி

தேவையான பொருட்கள்

அரசாணிக்காய் - 100  கிராம்
குதிரை வாலி - 50 கிராம்
வரகு - 50 கிராம்
சாமை - 50  கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 4
சீரகம் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் -  ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் -  சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அரசாணிக்காயை தோலோடு நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
  • சிறுதானியங்கள் அனைத்தையும் கழுவி, சுத்தம் செய்து, தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
  • பிறகு தானியங்கள் ஊறிய தண்ணீரோடு அப்படியே அடுப்பில் வைத்து அதனோடு பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். கொஞ்சம் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸை சேர்த்து  கஞ்சி பதம்வரும் வரை வேகவிடவும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேகவைத்த கலவையை ஊற்றிக் கொதிக்கவிடவும்.
  • பிறகு, தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும். தேவையான அளவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பின்பு பரிமாறவும்.

பயன்கள்

  • சத்துக்கள் நிறைந்த இந்தக் கஞ்சியை ஒரு வேளை உணவாக உட்கொள்ளலாம்.
  • பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி  உண்ணக்கூடிய அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com