தினமும் 4 முந்திரி சாப்பிடுங்கள்! இந்த 4 பலன்களைப் பெறுங்கள்!
By சினேகா | Published On : 10th November 2019 12:15 PM | Last Updated : 10th November 2019 03:39 PM | அ+அ அ- |

cashew nut
சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம்.
தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா 3,6 கொழுப்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
1. உடல் எடை குறைக்க
தினமும் 2 முந்திரி சாப்பிடுவதால் உடல் எடை குறையும். உடலில் உள்ள கொலெஸ்ட்ரால் குறையும். உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் குறைத்து ஸ்லிம்மாக ஆக உதவும்
2. தலைமுடி பிரச்னை
தலைமுடி உதிர்வது அதிகமாக இருந்தால், தினமும் 3 முந்திரிகள் சாப்பிடுவதால் இவற்றில் உள்ள காப்பர் முடியை அதிக உறுதியுடனும், கருகருவெனவும் வைத்து கொள்ளும்.
3. நான்கு முந்திரிகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
தினமும் 4 முந்திரியை சாப்பிடுவதால் இதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும். ரத்த நாளங்கள், எலும்புகள், நரம்புகள், மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து, இவற்றின் செயல்திறனை அதிகரிக்கும். முந்திரியில் உள்ள ப்ரோன்தோசயாடின் என்கிற மூல பொருள் புற்றுநோயை செல்களை உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் உடையது.
4. இளமை அழகுக்கு முந்திரிப்பழம்
முந்திரியில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் (lutein, zeaxanthin) கண் பார்வை கூர்மை பெருமாம். இதிலுள்ள வைட்டமின் பி சத்து செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். முந்திரிப் பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடும், சருமம் புத்துணர்வுடன் பொலிவாக இருக்கும்.