ரத்த சோகையை நீக்கும் அற்புதமான உணவு

முதலில் நீலச் சம்பா அரிசியைக் குருணையாக்கி நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
ரத்த சோகையை நீக்கும் அற்புதமான உணவு

நீலம்சம்பா பூண்டுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

நீலச்சம்பா அரிசி - ஒரு கப்
பூண்டுப் பல் - 12 பல்
வெந்தயம் - கால் ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
சுக்கு - ஒரு துண்டு
சித்தரத்தை - ஒரு துண்டு
திப்பிலி - 5
தேங்காய்ப் பால் - ஒரு கப்
இந்துப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நீலச் சம்பா அரிசியைக் குருணையாக்கி நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  • ஒரு கப் நீலச் சம்பா குருணை அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவும்.
  • இதனுடன் உரித்த பூண்டு , சீரகம் , வெந்தயம் மற்றும் உப்பு ஆகியவற்றைப் போட்டு குருணையை வேக வைக்கவும்.
  • ஒரு துணியில் சுக்கு மற்றும் சித்தரத்தை கட்டி கஞ்சி சிறிது சூடாக இருக்கும்பொழுது பாத்திரத்தில் இந்த  இந்த துணி முடிச்சை போடவும்.
  • குருணை  நன்கு வெந்து கஞ்சியாக வந்தவுடன் துணியை வெளியே எடுத்து விடவும்.
  • வெந்தக் கஞ்சியில் தேங்காய்ப் பால் சேர்த்து நன்கு மசித்துவிட்டு இறக்கி வைக்கவும்.

பயன்கள்

  • மிகவும் சத்து நிறைந்த இந்தக் கஞ்சியை  ரத்தச் சோகை உள்ளவர்கள் குடித்து வந்தால் ரத்தச் சோகை நீங்கும்.
  • தாய்மார்களுக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுக்கும்.
  • தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடிய உன்னதமான கஞ்சி நீலம்சம்பா பூண்டுக் கஞ்சி.
  • தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com