Enable Javscript for better performance
Panai Nungu recipe- Dinamani

சுடச்சுட

    

    உங்களுக்கு பனை நுங்கு பாயாசம் பிடிக்குமா? சத்து நிறைந்த ரெஸிபி இதோ

    By கோவை பாலா  |   Published on : 06th October 2019 10:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pineapple payasam

    தேவையான பொருட்கள்

    தோல்நீக்கிய பனை நுங்கு  - கால் கிலோ (சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
    வறுத்த சேமியா  - 50 கிராம்
    முந்திரிப் பருப்பு  - 50 கிராம்
    திராட்சை - 50 கிராம்
    ஏலக்காய் - 10 கிராம்
    நாட்டுச் சர்க்கரை - 100 கிராம்
    தேங்காய் பால் - தேவையான அளவு

    செய்முறை

    முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்து பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

    பின்னர் வறுத்த சேமியா மற்றும் சிறு துண்டுகளாக்கப்பட்ட பனை நுங்கு ஆகியவற்றை கொதித்த நீரில் சேர்த்து அதனுடன் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி பாயாசம் செய்வதை போல் தயார் செய்து இறக்கிய பின்பு தேங்காய் பாலையும் ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும் .

    பயன்கள்

    இந்த பாயாசத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் தைராய்டு குறைபாடு சீராகும் . ரத்த சோகை குணமாகும். உடல் வலிமை பெறும்.

    தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai