மனதிலும் உடலிலும் உற்சாகம் வேண்டுமா? இது உதவும்

சீதாப்பழத்திற்கு ஆங்கிலப் பெயர் கஸ்டடர்ட் ஆப்பிள். (CUSTARD APPLE) இதன் தாவர பெயர் அனோனாஸ்குவோசா.
மனதிலும் உடலிலும் உற்சாகம் வேண்டுமா? இது உதவும்

சீதாப்பழத்திற்கு ஆங்கிலப் பெயர் கஸ்டடர்ட் ஆப்பிள். (CUSTARD APPLE) இதன் தாவர பெயர் அனோனாஸ்குவோசா. இந்தியாவில் எண்ணூறு ஆண்டுகளாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சத்துகள்:

இப்பழத்தில் மாவுப் பொருட்கள், புரதம், கொழுப்பு, நார்ப் பொருள்கள் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புசத்து, மெக்னீசியம், வைட்டமின்கள் பி,சி, தாமிரம் குளோரின் முதலிய சத்துப் பொருட்கள் உள்ளன.

மருத்துவ குணங்கள்:

  • இப்பழத்தின் சதைப்பகுதி வெண்ணெய்ப் போன்று மிருதுவாக இருக்கும். இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். 
  • பழத்தின் சதைப்பகுதியை எடுத்து சாப்பிட்டு வர ரத்த விருத்தி ஏற்படும். சோகை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். 
  • தசைப்பிடித்தம் உள்ளவர்கள் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகள் சீராக இயங்கும்.
  • சீதாப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், அதிகமாக இருப்பதால், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், பெரியவர்கள் எலும்புகள் வலுப்படவும் உதவுகிறது.
  • ஆரம்ப நிலை வாத நோய் உள்ளவர்கள் இப்பழத்துடன் மிளகுத்தூள், சுக்குத்தூள் கலந்து சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும். 
  • ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சுத்தி ஏற்பட்டு ரத்த நாளங்களிலுள்ள கொழுப்பு பொருட்களை அடைத்துக் கொள்ளுவதைத் தடுக்கும். மாரடைப்பு வராது பாதுகாக்கும். 
  • முதியோர்கள் சீதாப்பழத்துடன் ஒரு மஞ்சள் வாழைப் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் முதுமையில் ஞாபக சக்தி குறைவதை தடுக்கும்.
  • கோடைக்காலத்தில் கடும் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் தன்மை கொண்டது சீதாப்பழம்.
  • சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். 
  • மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் இரண்டு சீதாப்பழம் தின்றால் மலச்சிக்கல் நீங்கும்.
  • சீதாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், மன இறுக்கம், உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்புகள் சீராக இயங்கும். 
  • கொஞ்சம் வெண்ணெய்யுடன் சீதாப்பழம் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், குடல் புண் குணமாகும்.

("பழங்களின் மருத்துவ குணங்கள்' எனும் நூலிலிருந்து) - உ.ராமநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com