Enable Javscript for better performance
healthy food for children|குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க  உன்னத உணவு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து மிக்க உன்னத உணவு

    By கோவை பாலா  |   Published on : 18th September 2019 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    healthy kids

    கேழ்வரகு பயத்தம் பருப்பு கஞ்சி

    தேவையான பொருட்கள்
     
    கேழ்வரகு - 200  கிராம்
    பயத்தம் பருப்பு - 250  கிராம்
    பொட்டுக் கடலை - 150  கிராம்
    நிலக் கடலை - 100  கிராம்
    வெல்லம் - 30  கிராம்

    செய்முறை : முதலில் கேழ்வரகையும், பயத்தம் பருப்பையும் தனித் தனியே நன்கு வறுத்துக் கொள்ளவும். நிலக்கடலை மற்றும் பொட்டுக்கடலையும் சுத்தப்படுத்தி வறுத்துக் கொள்ளவும். பின்பு வறுத்து வைத்துள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக்கி அரைத்து மாவாக்கிக் கொள்ளலாம். பின்பு கஞ்சி செய்யும் பொழுது 50 கிராம் அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கஞ்சியாக காய்ச்சி அதனுடன்  வெல்லத்தை தூளாக்கி கலந்து கஞ்சி தயாரித்து  குடிக்கலாம்.

    பயன்கள் : இந்தக் கஞ்சியை  தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்களின் உடலுக்கு மிகுந்த வன்மையையும் , ஊட்டச் சத்தையும்  அள்ளித் தரும் அற்புத உணவு. தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai