Enable Javscript for better performance
body weight and health drink | உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம்- Dinamani

சுடச்சுட

    

    உடல் பருமன் மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க உதவும் கசாயம்

    By கோவை பாலா    |   Published on : 08th January 2020 10:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    keerai_soup

    சிறுகீரை சீரகம் கசாயம்

    தேவையான பொருட்கள்

    சிறு கீரை.         -  2 கை அளவு

    சீரகம்.               -    2 ஸ்பூன்

    பார்லி               -    ஒரு கை அளவு

    மஞ்சள்.            -   சிறிதளவு


    செய்முறை 

    • முதலில் சிறுகீரையை நன்கு கழுவி ஆய்ந்து இரண்டு கையளவு எடுத்துக் கொள்ளவும்.
    • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறுகீரை மற்றும் பார்லி  , சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
    • நன்கு கொதித்து பின்பு  அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து  ஒரு கொதி வந்தவுடன்  இறக்கி  வைத்துக் கொள்ளவும்.

    பயன்கள் 

    • இந்த கசாயம் உடல் வீக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும்.
    • இதனை தினமும் அதிகாலை வேளையில்  குடித்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.

    இரவு படுக்கப் போகும் முன்

    வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு

    அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

    பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா  
    இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
    Cell : 96557 58609, 73737 10080
    Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai