மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலியைப் போக்க உதவும் அருமருந்து 

மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க இந்த சூரணத்தைத் தயார்செய்து பலனடையுங்கள். 
மாதவிலக்கின்போது உண்டாகும் வயிற்றுவலியைப் போக்க உதவும் அருமருந்து 

மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியைப் போக்க இந்த சூரணத்தைத் தயார்செய்து பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

அசோகப் பட்டை            -   150 கிராம்

பெருங்காயம்.                -      25 கிராம்

செய்முறை

முதலில் அசோகப் பட்டையை  தேவையான அளவு எடுத்து சுத்தப்படுத்தி நன்கு உலர வைக்கவும். பெருங்காயத்தை சுத்தப்படுத்தி தூளாக்கிக் கொள்ளவும்.
பின்பு அசோகப் பட்டையை அரைத்து தூளாக்கி  அதனுடன் பெருங்காயத் தூளைச் சேர்த்து  ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மேற்கூறியவற்றில் அசோகப் பட்டை பொடியாகவே நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அதனை வாங்கிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் மாதவிலக்கின் போது உண்டாகும் வயிற்று வலியை முற்றிலும் குணமாக்க உதவும் அருமருந்தாகும். 

மேற்கூறிய குறைபாடுகளால் பல வருடங்களாக துன்பப்படுபவர்கள் இந்த சூரணத்தை தயார்செய்து தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதம் தொடர்ந்து காலை , மதியம் மற்றும் மாலை என மூன்று வேளையும் தலா இரண்டு கிராம் எடுத்து சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பு பசு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி முற்றிலும் குணமாகும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

-கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com