கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை!

பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் காய்கறி, தானியங்கள் அல்லது ஃபோலேட் சத்துள்ள உணவுகளை சரிவர எடுத்துக் கொள்வதில்லை
கர்ப்பிணிப் பெண்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை!

பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் காய்கறி, தானியங்கள் அல்லது ஃபோலேட் சத்துள்ள உணவுகளை சரிவர எடுத்துக் கொள்வதில்லை அதனால் அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதை சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள்   கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு 'மெட்டர்னல் & சைல்ட் நியூட்ரிஷன்' ('Maternal & Child Nutrition') என்ற இதழில் வெளியிடப்பட்டது.

கர்ப்பிணிப் பெண்கள் முறையே 91 சதவிகிதம் மற்றும் 55 சதவிகிதம்  ஆய்வுகளில், இரும்பு அல்லது கால்ஷியம் உட்கொள்ளும் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், 55 சதவிகித ஆய்வுகளில் கொழுப்பு உட்கொள்ளும் பரிந்துரைகளை மீறியுள்ளதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு குறித்த வழிகாட்டுதல்களை வலியுறுத்தும் கையேடு உண்டு. அதனை மேம்படுத்துவதோடு,  இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  மேலும் நடுத்தர வயதில் கர்ப்பம், புகைபிடிக்கும் பழக்கம், இள வயது கர்ப்பம்  ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு இந்த வழிகாட்டும் கையேட்டை செறிவாக்க வேண்டும் என்று ஆய்வு வலியுறுத்துகிறது. மேலும்  இத்தகைய பிரச்னைகள் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்திலும், உணவிலும் கவனம் செலுத்துவதில்லை.  இது அவர்களது கர்ப்ப காலத்தில் சிக்கலையும், எதிர்வரும் சந்ததிகளின் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

"ஆரோக்கியமான உணவுக்கும் மகப்பேறுக்கும் இடையேயுள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும்.  முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் நன்றாக சாப்பிட உதவும் வகையில் உருவாக்கப்பட்ட வழிகாட்டும் கையேட்டினை படித்து அப்பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று எங்கள் ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது, பெரும்பாலனவர்கள் இப்படியொரு கையேடு உள்ளது என்பதையே அறிந்திருக்கவில்லை," என்று ஆஸ்திரேலியாவில் உள்ள எண்டெவர் இயற்கை சுகாதாரக் கல்லூரியின் ஆய்வாளர் செர்ரி காட் கூறினார் 

மேலும் அவர் கூறுகையில், "இந்த பிரச்னையை தீர்க்க சமூகத்திற்கு ஆரோக்கியமான உணவு பற்றிய விழிப்புணர்வு முதலில் தேவை.  உணவுக்கும், ஆரோக்கியமான கர்ப்பம் மற்றும் குழந்தைப் பிறப்புக்கு இடையிலான தொடர்புகளை அறிவுறுத்தும் சுகாதார நிபுணர்களுக்கான ஆதரவை அதிகரிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உணவு தேர்வுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் அறிந்திருக்க வேண்டும்’’ என்று காட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com