சுடச்சுட

  

  உங்கள் மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா? இதைச் செய்யுங்க!

  By உமா  |   Published on : 23rd June 2018 05:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  download1

   

  யோகா செய்வதால் உடல் நலம் மட்டுமல்லாமல் மன நலமும் மேம்படும். அதிலும் சர்வ அங்க ஆசனம் செய்வதால் ஒருவரது மூளைத் திறன் அதிகரிக்கும் என்கிறது ஆய்வுகள். சர்வம் என்றால் அனைத்து என்று பொருள். அங்கம் என்றால் அவயங்கள் என்று பொருள். உடலிலுள்ள அனைத்து அவயங்களும் ஆரோக்கியம் வழங்கும் ஆசனம் என்பதால் சர்வ அங்க ஆசனம் (சர்வாங்காசனம்) என்று பெயர் பெற்றது இந்த ஆசனம்.

  இந்த ஆசனத்தின் செய்முறை

  • முதலில் யோகா செய்யப் பயன்படுத்தும் பாயைத் தரையில் விரித்து, அதில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும்
  • கால்கள் இரண்டையும் சேர்த்து உயர்த்தி தலைக்கு மேலே கொண்டு சென்று ஹாலாசன நிலையில் இருக்கவும்.
  • அதே நிலையில் இருந்து இரண்டு கால்களையும் ஆகாயத்தை நோக்கியவாறு மேலே உயர்த்தி நிறுத்தவும்.
  • இரண்டு கைகளையும் முதுகில் வைத்து அழுத்தமாகத் தள்ளவும், அப்படியே தாங்கியவாறு உயர்த்தி நிறுத்திக் கொள்ளவும். அதே நிலையில் சுமார் பத்து சுவாசங்கள் விடவும்.
  • பிறகு கால்களை மீண்டும் ஹாலாசனத்துக்கு கொண்டு வந்தபின், மிகவும் மெதுவாகத் தளர்த்தியபடி இறக்கி கொண்டே வந்து இயல்பான நிலையில் விரிப்பின் மீது வைத்துவிட்டுச் சற்றே இளைப்பாறவும்.

  இதனை மூன்று முறை செய்யவும்.

  உடல் முழுவதும் தலைகீழாக நிறுத்தப்பட்டிருப்பதால் அனைத்துப் பகுதிகளும் முழுமையான ரத்த ஓட்டம் நடைபெறும். இந்த ஆசனத்தைத் தொடர்ந்து தினமும் செய்தால் பியூட்ரி, பீனியல், ஹைப்போதாலமஸ், தைராய்ட், பாரா தைராய்ட், தைமல், பான்க்ரியா, அட்ரினல் என அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். இந்த சுரப்பு நீர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டிவிடும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai