சுடச்சுட

  
  child-eye

  மாணவர்கள் கண்களை பாதுகாக்க சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம் என்றார் கண்ணப்ப நாயனார் கண்தானப் பிரசார மையத் தலைவர் சி.கோவிந்தராஜன். 

  புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சிப்காட் அபிராமி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய கண் தான இரு வார விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கண் தான படிவங்கள் வழங்கி கண்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர் பேசியது:

  மாணவர்கள்   காலையில்  எழுந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக்  கழுவ வேண்டும். தினமும் குறைந்தது மூன்று முறைகளாவது கண்களை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். படுத்துக் கொண்டு படிக்க கூடாது. மங்கலான வெளிச்சத்தில் படிக்க கூடாது. ஓடும் பஸ், ரயில், கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் போது படிக்கக் கூடாது.

  நம் கண்களை பாதுக்காக்க வைட்டமின் ஏ சத்து மிகவும் தேவை. தினமும் உணவில்  ஒரு கீரை வகையை சேர்த்துக் கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களில் உள்ள ஏராளமான சத்துக்கள்தான் போதுமான உயிர் சத்துக்களை கொடுத்து நல்ல நினைவாற்றலையும் அளிக்கின்றன. நோய் வராமல் எதிர்ப்புச் சக்தியும் கொடுக்கும்.

  கண்களை நன்றாக பாதுகாத்து கொள்ள வேண்டும். கண் தானம் செய்து பலருக்கு பார்வை அளிக்கலாம்.  எனவே கண் தானம் செய்ய முன் வரவேண்டும் என்றார். இதையடுத்து ஆசிரியர்களுக்கு கண் தான விழிப்புணர்வு படிவங்கள் வழங்கப்பட்டன.

  சங்கத் தலைவர் எம்.கருப்பையா, தாளாளர் உமாராணி, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி தாளாளர் பி. கருப்பையா, முன்னாள் தலைவர் கருணாகரன், பள்ளி தலைமையாசிரியை ஆர்.ஹேமலதா ஆகியோர் வாழ்த்தினர்.

  TAGS
  eye care
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai