சுடச்சுட

  

  ஆலப் போல்...வேலப் போல்.....ஆலம் விழுதைப் போல்!

  By தமிழ்க்குமரன்  |   Published on : 21st September 2016 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cc1968bd1485e79be85ad4441bd13c53

  ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு வேப்ப மரம் கட்டாயம் இருக்கும். ஆனால் அதன் பலன் தெரியாததால நமக்கு வரக்கூடிய நோய்களுக்காக எங்கெங்கயோ போய் காசை கரியாக்குறதோட நம்ம ஒடம்பையும் கெடுத்துக்கிடுவோம். ’ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ன்னு சொல்வாங்க. ஆலம் விழுதால பல் விளக்குறதுமாதிரி வேப்ப மரத்தோட குச்சியை வச்சும் பல்லு வெளக்குவாங்க. இதனால பல் கோளாறெல்லாம் சரியாகுறதோட பின்னாடி பல்லுல வேற பிரச்சினை எதுவும் வராம தடுத்துரும்.

  பேய் பிடிச்சவங்களோட தலையில வேப்ப இலையை வச்சி அடிப்பாங்க. நாமளும் விஷயம் புரியாம தலையை ஆட்டிக்கிட்டிருப்போம். இதுல உண்மை என்னன்னா பகல் 11 மணில இருந்து மத்தியானம் 2 மணி வரை வியானன்ற வாயுவை வேப்ப மரம் வெளிய விடும். மத்த நேரங்கள்ல பிராணவாயுவை வெளியிடும். இப்படியொரு விஷேசம் வேப்ப மரத்துக்கு மட்டுமே உண்டு. அதனாலதான் இந்த 11 மணியிலிருந்து 2 மணிக்குள்ள வேப்ப மரத்தடியில நின்னா வியானன் அதிகமா வெளிய வந்து பிராண வாயுவை தடை பண்ணிரும்... இதனாலதான் மூச்சுத்திணறல், உடல் சோர்வு வந்து பலகீனமா இருப்பாங்க. இதைத்தான் வேப்ப மரத்தடியில போனதால பேய் அடிச்சிட்டுன்னு சொல்வாங்க. ஆகவே ஆரோக்கியமானவர்கள் உள்பட யாருமே இந்த காலகட்டத்தில் வேப்ப மரத்தின் அடியில் நிற்கக்கூடாது. மற்ற நேரங்களில் வேப்ப மரத்தின் அடியில் நின்றால் அதிலிருந்து வியான வாயு குறைந்து பிராண வாயு வெளிப்பட்டு சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும். இதுதான் உண்மை. அதற்காக வியானன் கெட்ட வாயு இல்லை, அது இல்லையென்றாலும் நோய்கள் நம்மை தாக்கும். அதுபற்றி வேறொரு நாள் பார்ப்போம். 

  இது வெயில் நேரம். அம்மை வந்தால் வேப்பங்கொழுந்தையும், அதிமதுரப்பொடியையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு சிறு சிறு உருண்டைகளாக நிழலில் காய வைத்து தினமும் 3 வேளை ஒன்றிரண்டு மாத்திரை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். கை & கால், முதுகு பகுதியில் வலி ஏற்பட்டால் வேப்ப எண்ணெயுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். இதேபோல் கழுத்து வலி, வாத வலி உள்ளவர்களும், நுரையீரல் கோளாறு உள்ளவர்களும் வேப்ப எண்ணெயை சூடு பண்ணி தலைக்கு தேய்த்து சுடுதண்ணியில் குளித்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

  - தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai