சுடச்சுட

  
  heart

   

  முந்தைய காலத்தில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், மாரடைப்புக்குக் காரணமான அடைப்புடன் கூடிய இதய ரத்த நாளத்தைச் சீரமைத்து உயிரைக் காப்பது சவாலாக இருந்தது.

  ஆனால் இன்று இதய பொது மருத்துவப் பிரிவுக்கும் இதய அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கும் இடையிலான 'இன்ட்டர்வென்ஷனல் கார்டியாலஜி' என்று அழைக்கப்படும் நவீன இதய மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றம் காரணமாக இதய ரத்த நாள அடைப்பு உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளையும் உடனடியாகத் தீர்த்து உயிரைக் காப்பாற்ற முடிகிறது.

  மிகக் குறைந்த நேரத்தில்...நவீன இதய மருத்துவ சிகிச்சையின் முன்னேற்றம் மூலம் உலகம் முழுவதும் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான இதய நோயாளிகள் பலன் அடைந்து வருகின்றனர். இதய ரத்தக் குழாய்களைத் திறப்பது, மூடுவதைத் தாண்டி இதயத்தில் செயற்கை வால்வுகளைப் பொருத்துதல்-பழுதாகியுள்ள இதய வால்வுகளைச் சரி செய்தல் எனப் பலவற்றுக்கு திறந்த நிலை அறுவைச் சிகிச்சை (ஓபன் சர்ஜரி) தேவைப்படாத நவீன இதய மருத்துவ சிகிச்சை (இன்ட்டர்வென்ஷனல் கார்டியாலஜி') பலன் அளிக்கிறது.

  இத்தகைய நவீன இதய மருத்துவ சிகிச்சை முறைகளை முந்தைய காலங்களைவிட மிகக் குறைந்த நேரத்தில் செய்ய முடிவதும் குறிப்பிடத்தக்கது.

  உயிர் காக்கும் ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை: ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் இதய ரத்த நாள அடைப்பைக் கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை மூலம் உயிர் காக்கப்படுகிறது. திறந்த நிலை அறுவைச் சிகிச்சை ("ஓபன் சர்ஜரி') தேவைப்படாத இத்தகைய நவீன இதய மருத்துவ சிகிச்சை இப்போது நடைமுறையில் அதிகரித்துள்ளது; எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதய நோயாளிகளின் எண்ணிக்கைக்கு, ஆஞ்சியோபிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை முறை ஈடு கொடுக்க வேண்டிய நெருக்கடி உள்ளதையும் மறுக்க முடியாது.

  டாக்டர் பி.மனோகர்,
  இதய மருத்துவ நவீன சிகிச்சை நிபுணர்,
  ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், போரூர், சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai