லேப் டாப்புக்கு நோ சொல்லுங்கள் ஆண்களே!

லேப் டாப் டேபிள் அல்லது ஒரு தலையணைக்கு மேல் வைத்து பயன்படுத்துவது நல்லது
லேப் டாப்புக்கு நோ சொல்லுங்கள் ஆண்களே!

மடிக் கணினி என்பது நம் வாழ்வுடன் ஒன்று கலந்த ஒன்றாகிவிட்டது. இணையத்தில் ஒரு கவிதை எழுதவும், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை போடுவதும் என லேப் டாப் அனைவருக்கும் அத்யாவசியப் பொருளாகிவிட்டது. பேப்பர் படிப்பது முதல் பொருட்கள் வாங்குவது வரை எல்லாமே இணையத்தின் தயவில்தான் என்று வாழ்க்கை சிலருக்கு சுருங்கிப் போய்விட்டது. இந்த சிலர் பலராகிக் கொண்டிருப்பது முன்னேற்றமா வீழ்ச்சியா என ஒரு பக்கம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த லேப்டாப்பால் ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் பல. அதில் குறிப்பிடத்தக்கது அதனை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என ஆய்வு முடிவுகளில் கூறப்படுகிறது.

ஆண்கள் சிலர் வீட்டுக்கு வந்தும் அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கட்டிலில் அமர்ந்து கொண்டு மடியில் இந்த லேப்டாப்பை வைத்து வேலை செய்து கொண்டிருப்பார்கள். இப்படி செய்வதால் அவர்களுடைய விந்தணுக்கள் அவர்களுக்கே தெரியாமல் பாதிப்படைந்து கொண்டிருக்கிறது என்று தொடர் ஆராய்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தெரிவித்து வருகின்றன.

ஆண்களைப் பொருத்தவரை விரைகளின் வெப்ப நிலை இயல்பைவிட அதிகரித்தால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும். நீண்ட நேரம் லேப் டாப் பயன்படுத்தும் போது கூலம் பேட்களை பயன்படுத்தியிருந்தாலும் கூட, அதில் உருவாகும் வெப்பம் உடலுக்குள் ஊடுருவுகிறது. அது விரைகளின் வெப்பநிலையை அதிகரித்து விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. திருமணம் முடிந்து குழந்தைப் பேறுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள் எனில் இது குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.

லேப் டாப் டேபிள் அல்லது ஒரு தலையணைக்கு மேல் வைத்து பயன்படுத்துவது நல்லது. உடலை விட்டு சற்று தள்ளி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் இடைப்பகுதிக்கு அருகில் வைத்திருக்க வேண்டாம். 

புகைப்படிப்பது, சத்தற்ற உணவுகளை உட்கொள்வது, இரவில் உறக்கமின்மை, செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருப்பது, நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வது, வெப்பான பருவ நிலையில் இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிவது, சமையல் வேலை செய்யும் போது நீண்ட நேரம் வெப்பத்தில் இருப்பது போன்றவை விந்தணு குறைப்பாடுகள் ஏற்படக் கூடிய பிற காரணங்கள் எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com