மாணவர்களே! படித்தது எல்லாம் மறந்து போகிறதா? ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு உங்களுடைய நினைவாற்றலை பாதிக்கலாம்

மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சானது நீண்டகாலமாக அதைப் பயன்படுத்திவரும்
மாணவர்களே! படித்தது எல்லாம் மறந்து போகிறதா? ஸ்மார்ட்போன் கதிர்வீச்சு உங்களுடைய நினைவாற்றலை பாதிக்கலாம்

மொபைல் ஃபோன்களிலிருந்து வரும் கதிர்வீச்சு தொடர்ந்து அதைப் பயன்படுத்தி வரும் இளம் வயதினரிடையே சில மோசமான பாதிப்புக்களை உருவாக்கும் எனவும், மூளை மண்டலங்களின் நினைவாற்றல் திறனை சித்தக்க வல்லது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் உடல்நலம் பற்றிய சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்தில் உள்ள கிட்டத்தட்ட 700 இளம் பருவத்தினர் பங்குபெற்றனர்.
 
ஸ்விஸ் ட்ராபிகல் மற்றும் பப்ளிக் ஹெல்த் இன்ஸ்டிடியூட் (ஸ்விஸ் டிபிஹெச்) விஞ்ஞானிகள், வானொலி அலைவரிசைக்குரிய மின்காந்த புலங்கள் (RF-EMF) வயர்லெஸ் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டிற்கும் இளம் பருவத்தினரின் நினைவாற்றல் திறனுக்கு உள்ள தொடர்பைக் கண்டனர்.

இந்த ஆய்வில், ஒரு வருடத்திற்கும் மேலாக மொபைல் ஃபோன் பயன்படுத்தினால், இளம் பருவத்தினரின் ஒட்டுமொத்த RF-EMF மூளை செயல்திறன் வளர்ச்சிக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று எடுத்துக் கூடிய முந்தைய ஆய்வின் (2015) முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.

Figural memory வலது மூளை அரைக்கோளத்தில் அமைந்துள்ளது மற்றும் RF-EMF உடன் தொடர்பில் இருப்பது. எனவே இளைஞர்கள் தங்களது வலது காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசுவது நல்லது. வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களின் விரைவான பரிணாம வளர்ச்சி (ICT) நம் அன்றாட வாழ்வில் கதிர்வீச்சு அதிர்வெண் மின்காந்த புலங்களின் (RF-EMF) வெளிப்பாட்டினை அதிகரிக்கச் செய்யும். RF-EMF தொடர்பான சாத்தியமான சுகாதார விளைவுகளை அடையாளம் காண பல ஆய்வுகள் நடத்தப்பட்டன, ஆயினும் முடிவுகள் முடிவுக்கு வரவில்லை. இந்த RF-EMF மற்றும் ஸ்மார்ட்போன் தொடர்பான விளைவுகளைப் பற்றி தனது ஆய்வில் மார்டின் ரூஸ்லி விரிவாக கூறினார், இவர் சுவிஸ் TPH உள்ள சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தலைவர் ஆவார்.

வயர்லெஸ் தகவல் தொடர்பு பயன்பாடு, மொபைல் போனின் மற்ற அம்சங்களான, குறுஞ்செய்திகளை செய்திகளை அனுப்புவது, விளையாட அல்லது இணையத்தில் உலவுதல் போன்ற செயல்களால் மூளைக்கு பிரச்னையில்லை. சில சமயம் இவை நன்மையும் செய்கின்றன. எனவே மூளை RF-EMF வெளிப்பாடு மற்றும் நினைவக செயல்திறன் வளர்ச்சியுடன் தொடர்புடையதாக இல்லை.

'இந்த ஆய்வின் தனித்துவமான அம்சம் மொபைல் ஃபோன் பயன்படுத்தும் பயனர்களிடமிருந்து நேரடியாகச் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆகும் என்று ரூஸ்லி தெரிவித்தார். மற்ற காரணிகளை நிரூபிக்க இன்னும் கூடுதலான ஆய்வு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

'உதாரணமாக, மொபைல் போன் பயன்பாட்டினால் பதின் வயதுப் சிறுமிகள் விரைவில் பூப்படைகிறார்கள். இது போன்ற விஷயங்களை மேலும் ஆய்வு செய்து முடிவுகளைத் துல்லியமாக கூற வேண்டியிருக்கிறது’ என்று ரூஸ்லி கூறினார்.

RF-EMF மூளை செயல்முறைகள் எவ்வாறு பாதிக்கலாம் அல்லது நீண்டகாலத்தில் எமது கண்டுபிடிப்புகள் எப்படி இருக்கும் என்பதை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ரூஸ்லி கூறினார்.

மூளைக்கு அபாயம் தருபவை ஹெட்ஃபோன்களை அதிக சத்தத்தில் வைத்துக் கேட்பது, சிக்னல் குறைவாக இருக்கும் சமயங்களில் மொபைல் பயன்படுத்துவம் கூட. காரணம் கதிர் வீச்சின் பாதிப்பு அச்சமயங்களில் அதிகமாக இருக்கும். மேலும் ரிங் போகும் போதும் போனை காதிலேயே வைத்திருக்க கூடாது. ஸ்பீக்கர் மோடில் அல்லது சற்றுத் தொலைவில் வைத்திருந்து எதிர்முனையில் எடுக்கப்பட்டவுடன் காதில் வைக்க வேண்டும். ஒரு மொபைல் போனிலிருந்து இன்னொரு ஃபோனுக்கு ரிங் போகும் போது கதிர்வீச்சு 14 மடங்கு அதிகமாக இருக்கும் என்கிறது ஆய்வு.

செல்ஃபோன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான புற்றுநோய் கட்டிகள் உருவாகுவதாக ஆய்வாளர்கள் முந்தைய ஆராய்ச்சியில் விளக்கியிருந்தனர். Gliomas, Acoustic neuormaspe ஆகிய புற்றுநோய் கட்டிகள் உருவாகலாம். 24 மணி நேரத்தில் 30 நிமிடங்களுக்கு மேல் மொபைல் ஃபோன் பயன்படுத்தினால் பலவிதமான நோய்கள் வர காரணமாகிவிடும். 

மேலும் போனைப் பிடித்திருக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். முனைகளைப் பிடித்து பேசுதல் நலம். பேக் பேனலை அதாவது பின் பக்கத்தை மூடிக் கொண்டு பேசக் கூடாது. காரணம் மொபைல் போன்களின் இண்டர்னல் ஆண்டெனா பின்பகுதியில் தான் இருக்கும். மொபைல் ஃபோனில் வைப்ரேஷன் மோடில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். உறங்கும் போது போனை தலையணைக்கு அடியிலோ அல்லது அருகிலேயே வைத்து படுக்கக் கூடாது. 

தகவல் தொழில்நுட்ப உலகில் செல்ஃபோன் இல்லாமல் இருக்கவும் முடியாது. எனவே கவனமாக அது தேவைப்படும் போது மட்டும், தேவைப்படும் அளவிற்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. குழந்தைகள் இளம் வயதிலேயே பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, அதை அவர்களிடம் கொடுப்பதை தவிர்த்துவிடுதல் நலம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com