சுடச்சுட

  

  கட்சே - தாவூத் தொலைபேசி விவகாரம்: மும்பை போலீஸார் தீவிர விசாரணை

  By kirthika  |   Published on : 26th May 2016 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் ஏக்நாத் கட்சேவுடன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தில், புதிய கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக மும்பை போஸீஸார் தெரிவித்துள்ளனர்.
   இதுதொடர்பாக மும்பையில் அந்நகர காவல்துறை ஆணையர் தத்தாத்ரேய பாத்சால்கிஹர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
   அமைச்சர் கட்சேவின் தொலைபேசி எண் என்று தெரிவிக்கப்படும் தொலைபேசி எண்ணில் இருந்து 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டத்தில் எந்த அழைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த எண்ணுக்கு வெளியே இருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை.
   ஆனால், இதுதொடர்பாக நாங்கள் நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் கிடைத்தன. அதுகுறித்து நாங்கள் தற்போது விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் தத்தாத்ரேய பாத்சால்கிஹர்.
   ஆனால், எது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. அதேபோல், கட்சேவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை என்று மும்பை போலீஸார் கருதுகிறதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
   முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரீத்தி சர்மா மேனன், பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஏக்நாத் கட்சேவின் எண்ணுக்கு பலமுறை தொலைபேசியில் பேசியதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீûஸ நேரில் சந்தித்தும் அவர் புகார் அளித்தார்.
   ஆனால், இந்த விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று கட்சே மறுத்து வருகிறார். அவரின் கருத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai